Tuesday 28 June 2016

பிரதிபக்ஷ பாவனை'

யோக சூத்திரத்தில் "பிரதிபக்ஷ பாவனை' என்றால்.....

"தவறாக ஒரு எண்ணம் வரும் போது அதற்கு நேர் எதிராக ஒரு எண்ணத்தை உண்டாக்குவதுதான் பிரதிபக்ஷ பாவனை' என்கிறார் காஞ்சி மாமுனிவர்.

"விளையாட்டுப் பொருட்களிலும்கூட தத்துவங்களை உணரமுடியும்' என்று காஞ்சிப் பெரியவர் கூறியிருக்கிறார்.

தலையாட்டி பொம்மை:
தலையாட்டி பொம்மை முதலில் நிலையாக நிற்கும். அதை யாராவது ஆட்டிவிட்டால் ஆடும். ஞானிகளும் அப்படிதான். பக்தர்கள் அவர்களிடம் பிரார்த்திக்கும்போது, அவர்களின் நிலைக்கு இறங்கிவந்து கருணை காட்டி வழிகூறியபின்- அவர்களின் துயரம் தீர்த்தபின், மீண்டும் தன் உண்மை யான நிலைக்கு- பற்றற்ற நிலைக்குத் திரும்பி விடுவார்கள்.

தலையாட்டி பொம்மையின் அடி மட்டுமே கனமாக இருப்பதுபோல, அந்தராத்ம அனுபவம் கனமாக உள்ள ஞானிகள் தலைக்கனம் இல்லாமல் (ஊஞ்ர்) இருப்பதால், பக்தர்களின் நிலையில் சிறிது இருந்துவிட்டு தங்களுடைய சகஜ நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இதுதான் தலையாட்டி பொம்மை பற்றி பெரியவர் கூறிய தத்துவம்.

கிலுகிலுப்பை:
வட்டவடிமான அல்லது சதுர வடிவமான ஒரு அமைப்புக்குள், ஓசை எழுப்புகின்ற உருண்டையான மனிதர்களாகிய நாம் பேசிக்கொண்டும், உறவு கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும் இருக்கிறோம்.
இறைவன்தான் உலகமாகிய கிலுகிலுப்பையை ஆட்டுகிறார் என்றாலும், நமது கர்மாவிற்கு ஏற்பதான் நாம் ஆட்டுவிக்கப்படுகிறோம். நமது இன்பமும் துன்பமும் நமது கர்மாவைப் பொறுத்தே அமைகிறது.

பலூன்:
காயமே இது பொய்யடா! காற்றடைத்த பையடா என்பதை உணர்த்தும் வண்ணமாகவே பலூன்கள் உள்ளன.

ஓடி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் மூச்சுக் காற்று நின்று போனால் உடைந்த பலூன் மாதிரி ஆகிவிடுகின்றனர்.

கண்ணாமூச்சி ஆட்டம்:
கண் கட்டப்பட்ட ஒருவர் கண் கட்டாத நிலையில் உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதே இந்த ஆட்டம்.

உலகமெனும் விளையாட்டுத் திடலில் மாயையால் கண்கள் கட்டப்பட்டு இறைவனை- நிம்மதியைத் தேடி அலைகிறோம்.

வைராக்கியத்துடன் தெய்வீக முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு சற்றே இறைவனைத் தொட்டுவிட்டாலும் போதும்- இறைவன் மறைந்த இடத்திலிருந்து வெளியேவந்து அருள் தருவான்.

வெளி விஷயங்களில் மனதை விடாமல், கண்ணை மூடி உள்ளே உள்ளே தேடவேண்டும் என்பதைக் குறிக்கும் வண்ணமாகவே கண்ணை கட்டிக் கொண்டு ஆடும் இந்த ஆட்டம் உள்ளது.

ஏனெனில் கண்மூடி இருந்தால் கவனச் சிதைவு ஏற்படாதல்லவா......!!!

மறுபிறவி- குழந்தை மேதைகள்

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து'
என்கிறது குறள்.

ஒருவனுக்கு ஒரு பிறப்பில் கற்ற கல்வியறிவு வரும் பிறப்புகளிலும் சென்று உதவும்.

ஒருவன் இறந்தவுடன், அவனது திறமைகள், அறிவு, ஞானம் முதலானவை நுண்ணுடல் வடிவத்தில் தக்கசமயத்தில் அடுத்த உடலை வந்தடைகின்றன.

எனவே முற்பிறவியில் எந்தத் துறையில் திறமை பெற்றிருந்தாரோ அந்தத் திறமை அடுத்த உடலிலும் தொடர்ச்சியாக வந்து செயல்படுகிறது.

மாண்டலின் சீனிவாசன் போன்ற பல அதிமேதாவிகள் குழந்தைப் பருவத்திலிருந்த அதிசயிக்கத்தக்க திறமைகளைப் பெற்றிருந்தது சென்ற பிறப்பின் வாசனையால்தான்.

அக்ரீத் ஜஸ்வால், தன் 7-ஆவது வயதிலேயே சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து அற்புதம் நிகழ்த்தினார்.

இது நடந்தது நவம்பர் 2000. இதனால் அந்த வயதிலேயே மருத்துவக் கல்லூரியில் சேரும் தகுதியைப் பெற்றார்.

வைஷாலினி, தமிழ்நாட்டில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

சிறந்த அறிவுத் திறமையால் தன்னுடைய 13 வயதிலேயே MCP (Microsoft Certified Professional) மற்றும் CCNA (Cisco certified Net associate) ஆகிய உயர்தர சான்றிதழ்கள் பெற்ற சிறப்புடையவர்.

ஜாகிர் உசேன் 12 வயதிலேயே தபேலா வாசிப்பதில் திறமை பெற்றவர்.

கணிதமேதை இராமானுஜம் தன்னுடைய 13-ஆவது வயதிலேயே கணிதத்தில் Number Theory, Bernouli Numbers போன்ற பல தேற்றங் களைக் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளார்.

நேஹா ராமு என்ற இந்தியப் பெண் லண்டனில் அறிவுத் திறன் (IQ Test) தேர்வில் 162 மதிப்பெண் பெற்று அனைவரையும் அசர வைத்துள்ளார். இவளது (IQ) விஞ்ஞானி ஐன்ஸ் டீன், கணினி மேதை பில்கேட்ஸ் ஆகியோரின் ஒண வையும் மிஞ்சிய அளவில் உள்ளது.

இதற்கெல்லாம் இவர்கள் சென்ற பிறவியில் பெற்றிருந்த ஞானத்தின் தொடர்ச்சியான எண்ணப் பதிவுகளே காரணம்.

சென்ற பிறவியில் பெற்றிருந்த திறமை, ஞானம் முதலானவை அடுத்த பிறவிக்கு வருகிறது என்பதை உணரும்போது வியக்காமல் இருக்க முடியுமா.....???

கண்முன் சாட்சியாக எவ்வளவோ குழந்தை மேதாவிகளைப் பற்றி அறியும்போது நம்பாமல்தான் இருக்கமுடியுமா.....???

விஞ்ஞான அறிவைத் தாண்டிய பல விஷயங்களை மனதில் அசைபோடும்போதுதானே பக்தி உணர்வு வரும்.....!!!
ஆக, எல்லாமே அர்த்த பூர்வமாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாம் தான் அர்த்தத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நமக்குதெரிந்ததை வைத்து இது தான் உண்மை என்று நம்பி ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறோம்......!!!

ஞானிகள், தத்துவாதிகள் அனைவரும் உணர்ந்து கூறியிருப்பதை நாமும் நிதானமாக கற்று தேர்ந்து வாழ்வில் முனேற்றம் காண்போம்......!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.