Thursday, 30 June 2016

குழப்பம்

குழப்பம் - பகிர்வு

குழப்பம் ஏன் வருகின்றது என்று பார்த்தால்

முதலில் சரி எது தவறு எது என்று தெரிவதில்லை

சில வற்றை சரி என்று செய்து கொண்டு இருப்போம் பின்பு ஓரு நாள் அது தவறாக தெரியும் - தவறு என்று நினைத்தது சரி என்று தோன்றும்

இந்த சரி தவறு என்பது எப்பொழுது தோன்றுகிறது இருக்கும் நிலையை வைத்து புதிதாக கேட்கும் அல்லது தெரிந்து கொள்ளும் நிலையை வைத்து ஒப்பீடு செய்து கொள்வது

ஒப்பீடு செய்த பின்னர் நாம் அப்படி இல்லையே - இப்படி இல்லையே என்று தடுமாறி கொள்கின்றது இந்த தடுமாற்றம் குழப்பமாக மாறுகிறது

சரி தவறு என்று ஏன் தோன்றுகிறது என்று பார்த்தால் அதற்கு அடிப்படையாக இருப்பது சந்தேகம் என்ற தன்மை தான் காரணமாக இருக்கிறது

சந்தேகம் ஏன் வருகின்றது என்று பார்த்தால் எந்த செயலிலும் - எது நிலையானது - ( எது உண்மையானது ) என்பதை உணராததே காரணமாக அமைகின்றது

உண்மையே ஆயினும் முழுமையாக உள் வாங்கி அதை உணர்வாக மாற்றி அமைத்து கொள்ளும் தன்மை இருக்கும் வரை குழப்பம் தான் ,

ஏனெனில் பெரும்பாலும் ஆன்மீக கருத்துக்களை முழுமையாக உள் வாங்கி கொள்ளாமல் அவசர அவசரமாக படித்து விட்டு அதை உணர்ந்தது போல பாவித்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றி கொண்டு செயல் ஒன்று விளக்கம் ஒன்று என்ற அடிப்படையில் குழம்புவது அதிகமாகவே உள்ளது

ஒரு விளக்கத்தை உள் வாங்கி அதை ஆழமாக உணர்வு பூர்வமாக நமது தியான சக்தியை கொண்டு நடைமுறை வாழ்வில் அனுபவமாக இறுதியில் உணர்வாக பெரும் பொழுதே உண்மை என ஒவ்வொரு தனி நபரும் உணர்ந்து கொள்ள முடியும்

இந்த உண்மையை உணரும் பொழுது , சந்தேகத்தின் அடிப்படையில் வரும் சரி தவறு என்பதை ஒட்டி வரும் குழப்பம் இல்லாத தெளிவு கிடைக்கும்

குழப்பத்தில் வரும் தெளிவு இன்னும் ஆழமாக உள்ளே செல்ல வைக்கும்

குழப்பத்தை புரிந்து கொண்டால் அது தெளிவுக்கு உண்டான அற்புதமான வழிகாட்டி என்பதை புரிந்து கொள்ள முடியும்

ஆனால் குழப்பத்தில் முடங்கி கொள்வதை  அவரவர் உடைத்து கொள்ளாமல் இருப்பது மிக கொடுமையான வேதனையாகவே அமைகிறது

உண்மை தேடல் இருக்கும் பொழுது எந்த குழப்பம் வந்தாலும் முழு தெளிவு பெரும் வரை உள் தன்மை ஓய்வு எடுக்காது , சோம்பேறி ஆகவும் ஆகாது

தியானம் எல்லா குழப்பங்களையும் தெளிவு செய்யும்

நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.