Wednesday 22 June 2016

ஆக்கம்

*ஆக்கம்*

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்று  குர்ஆனும்  பைபிளும் கூறுகின்றன.   

ஒலி எழுப்பும் களிமண்ணிலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம். (குர்ஆன்.  15. 26 )

பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே.
என்று  கவிஞன்  பாடுகிறான்  என்றால்  பெண்  ஏதோ  ஒரு  பூவிலிருந்து பிறந்து  வந்தால் என்று  பொருள்  இல்லை ,

பெண் பூவைப் போன்றவள்  பூவின் தன்மைகள் கொண்டவள் என்று பொருள்.

பூ இங்கே  குறியீடு ,

அப்படியே மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதில்  மண் (ணும் ஒரு குறியீடு)

அதாவது மனிதன் மண்ணைப் போன்றவன்  மண்ணின் தன்மைகள் கொண்டவன் என்று, பொருள்.

ஐம்பூதங்களில் இறுதியாக தோன்றியது  மண் ,

ஆகாயத்தில் முதலில் காற்று தோன்றியது , பின்னர்  அதிலிருந்து  நெருப்பத் தோன்றியது ,  அதனால்  நெருப்பில் காற்றின் சாரமும் இருந்தது ,

நெருப்பிலிருந்து நீர் தோன்றியது   அதனால்  காற்று.   நெருப்பின் சாரம் நீரில் இருந்தது ,

நீரிலிருந்து மண் தோன்றியது. அதனால் ஆகாயம் காற்று.  நெருப்பு.  நீரின் சாரம் மண்ணில் இருந்தது !

மனிதன் மண்ணிலிருந்து தோன்றினான்.  எனவே அவன் ஐந்து பூதங்களின் சாரமாய்  இருக்கிறான் !

மனிதனைக் களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம்.
(குர்ஆன் 23.  12)  
என்கிறான்  இறைவன் 

காற்றுப் பரிணமித்து  மண்ணாயிற்று மண் பரிணமித்து மனிதன் ஆனது

எனவே மண் பரிணாமத்தில் வந்தது போலவே  மனிதனும் பரிணாமத்தில் வந்தவன் என்று பொருள் !

பரிணாமத்தில் மண் ஐம்பூதங்களின் உச்சி !
மனிதன்  உயிர்களின் உச்சி !

நெருப்பிலேயே இயற்கைச் சக்திகள் தோன்றி விட்டன.
இந்த சக்திகளை இந்தியத் தொன்மம் தேவர்.  அசுரர்.  என்று கூறுகிறது.   இஸ்லாமியத் தொன்மம்  மலக். ஜின்  என்று  கூறுகிறது !

இறைவன் நெருப்பின் ஒளியிலிருந்து  மலக்குகளையும்.   வெப்பத்திலிருந்து  ஜின்களையும்  படைத்தான். என்று  இறைதூதர்  ,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் !

உயிர்கள் நீரில் பிறந்தன என்பதை  மெய்ஞ்ஞானமும்  விஞ்ஞானமும்  ஒருமித்துக் கூறுகின்றன .

நீரில் பிறந்த உயிர்கள் பரிணமித்து நிலத்தில் ஊர்வன  திரிவனவாகவும்.   வானத்தில் பறப்பனவாகவும் மாரின ,

இந்தப் பரிணாம மரத்தின் உச்சிக் கனியாய் மனிதன் தோன்றினான் !

எனவே அவனிடம் சகல உயிர்களின் சாரமும் இருக்கிறது.      அதனால்தான் அவன்  மற்ற உயிரினங்களை அடக்கி ஆளும் ஆற்றல் பெற்றான். 
மனிதர்களே வானங்களில்  உள்ளவற்றயும் பூமியில்.   உள்ளவற்றையும் இறைவன்  உங்களுக்கு  வசப்படுத்தித் தந்திருக்கிறான் ( 31. 20. )  என்று குர்ஆன் கூறுகிறது ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.