Friday, 17 June 2016

கேதார்நாத்கோயில்

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

     🙏�கேதார்நாத்கோயில்🙏�

         *"Kedarnath Temple"*

கேதார்நாத் கோயில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும்.

இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,

கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் இமயமலைத் தொடரின் அடியில் அமைந்துள்ளது.

இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.

குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.

இக்கோயிலில் "சிவபெருமான்" கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது.

கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.

இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

இது ""திருநாவுக்கரசரால்"" தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.

இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும்,

அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது.

இக்கோயில் "ஆதி சங்கரரின்" வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது.

வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

"மகாபாரதப் போரில்" தங்கள் உறவினர்களையே கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர்.

ஆனால் சிவபெருமான் கயிலாயம் சென்றிருப்பதை அறிந்த பாண்டவர்கள்,

காசியிலிருந்து கயிலாயம் நோக்கி பிரயாணம் செய்யத் தொடங்கினர்.

ஹரித்வார் வழியாக இமயத்தை அடைந்தபோது, தொலைவில் "சிவபெருமானை" கண்டனர்.

ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார்.
அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

"சிவபெருமானைத்" தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் ,

பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமாலயப் பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் என்னும் இடத்தை அடைந்தனர்.

அங்கு அவர்கள் சிவபெருமானை தேடி அலைகையில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர்.

பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான்.

ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது.

ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது.

அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது.

பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான்.

அப்போது நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது.

அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது.

அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில் இருந்தது.

காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு "ஜோதிர்லிங்கம்" உண்டானது.

அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார்.

அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது.

கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன.

பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார்.

இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர்.

பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான "சுவர்க்கரோகினி" என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது.

"பீமன்" காட்டெருமை உருவத்திலிருந்த "சிவபெருமானோடு "
சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான்.

அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

நீரும் வில்வமும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

நர-நாராயணர் பத்ரிகா என்னும் கிராமத்திற்கு சென்று "சிவபெருமானை" வழிபட்டனர்.

அவர்களுக்குக் காட்சியளித்த சிவபெருமானிடம்,
உலக மக்கள் நன்மைக்காக சிவபெருமான் எப்போதும் இங்கு இருந்து அருள வேண்டும் என்று வேண்டினர்.

அவர்கள் வேண்டுதலை ஏற்ற *"சிவபெருமான்"*,

இமயத்தில் *"கேதார்"* என்னும் இடத்தில் *"ஜோதிர்லிங்க"* வடிவத்தில் திகழ்கிறார்.

அவர் *"கேதாரேஷ்வரர்"* என்று போற்றப்படுகிறார்.

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.