Sunday, 26 June 2016

இனி வீசி எறிய எதுவும் இல்லை!...

இனி வீசி எறிய எதுவும் இல்லை!...

எல்லோரும் அதி வேகமாக ஓடுகிறார்கள்.

நவீனம் நடத்தும் பொருளாதாரப் பந்தயத்தில் ஓடுவதற்குச் சொந்த ஊர் சுமையாக இருந்தது...
அதை உதறி வீசினார்கள்.
வேகம் மேலும் கூடியது.

பந்தயம் மேலும் கடினமான போது தாய்மொழி சுமையாக இருந்தது... அதையும் வீசினார்கள்.
வேகம் அதிகரித்தது.

பின்னர், அறச் சிந்தனைகள் பெரும் சுமையாகின. அவை அனைத்தையும் உதறி விட்டு ஓடினார்கள்.

இறுதியாக உறவுகள் யாவும் சுமையாகிப் போயின. அவற்றையும் கழற்றி வீசி விட்டு பொருளாதாரப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள்.

இப்போது, `பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை’ என்ற வெறி மட்டுமே விஞ்சியுள்ளது.

இனி வீசி எறிய எதுவும் இல்லை

நம் வாழ்க்கையைத் தவிர...

🌊🌧💨💥💦✨🎆🌪🔥⛄☄

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.