Thursday, 23 June 2016

மூன்று உடல்கள்

# மூன்று # உடல்கள் (நீண்டபதிவு பொறுமையாகப்படிக்கவும்.
1. நமது உடல் ( # தூல_உடல் )
2. நம் கண்ணுக்குத் தெரியாத நமது
# சூட்சும_உடல்
3. நம் இந்த பிறவிக்குக் காரணமான " # காரண_உடல் "
(சென்ற பிறவிகளின் பாவ புண்ணியங்களின் சேர்க்கை)
இப்போது சூட்சும உடல் பற்றிப் பார்ப்போம்.
இந்தப் பதிவில் நம் கண்ணுக்குத் தெரியாத நமது
#சூட்சும_உடல் பற்றிப் பார்ப்போம்.
சூட்சும உடல் கீழ்கண்டவைகளால் ஆனது.
# மனம் : சந்தேகம் எழும் போது மனதிற்கு மனம் என்ற பெயர் பெறுகிறது. எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாத குழம்பிய மன நிலை இது.
# சித்தம் : பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பதிவுகளால் (சமஸ்காரங்கள்) மனதில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிப்பு நிலையமாக திகழும் மனதின் பகுதி சித்தம் எனப்படுகிறது.
# புத்தி : தொலைவில் வருபவன் ராமுவா அல்லது ராகவனா என்று குழம்பிய மனம், சேமிப்பு நிலையமான சித்தத்தில் தொலைவில் வருபவனை ராமு என்றோ அல்லது ராகவன் என்றோ ஒப்பிட்டு நோக்குகிறது.
சித்தத்தில் ஏற்கனவே ராமுவை அல்லது ராகவனை பற்றிய பதிவுகள் இருக்குமானால் அவன் ராமு அல்லது ராகவன் என்ற முடிவிற்கு வருகிறது.
ஒரு வேளை அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் சித்தத்தில் இல்லாவிட்டால், `அவன் யார் என்று தெரியவில்லை` என்று முடிவு செய்கிறது மனம்.
இவ்வாறு முடிவு செய்கின்ற மனமே புத்தி ஆகும்
# அகங்காரம் : மேற்கண்ட மூன்று படிகளின் மூலமாக ஒருவரை அல்லது ஒரு பொருளை அறியும்போது, நான் ராமுவை அறிகிறேன், நான் ராகவனை அறியவில்லை, என்று உறுதி செய்கின்ற நான் எனும் உணர்வாகத் ( # Ego ) திகழும்போது மனம் அகங்காரம் எனப்படுகிறது.
# மனித_உடலில்_உலவும்_வாயுகள்
பிராணன்
அபானன்
சமானன்
உதானன்
வியானன்
நாகன்
கூர்மன்
கிருகரன்
தேவ தந்தன்
தன்ஞ்சயன்
# பிராணன்
************
உடலில் உயிர தரித்திருப்பதற்குக் காரணமாயிருப்பது விஞ்ஞானத்தின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி.
அதுதான் பிராணன்
இந்த சக்தி உடலைவிட்டுப் பிரிவதைத் தான் “பிராணன் போய் விட்டது” என்று மரபு வழியாகச் சொல்லி வந்திருக்கிறோம்.
பிராணன் உடலில் இருக்கும் வரையில் உடல் இறந்து விடாது.
மனித உடலின் எல்லா உணர்வுகளும் அடங்கி விட்டது போல் தோன்றினாலும், பிராணன் உடலை விட்டு வெளியேறும் வரையில் மனிதன் இறந்து விடுவதில்லை.
இக்கட்டத்தில் பிராணனைப் பற்றி மேலும் சிறிது விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இயல் உலகை இயக்குவது இரண்டு மூலப்பொருட்கள். ஆகாசம் மற்றொன்று பிராணன்.
ஆகாசம் என்பது பிரபஞ்சம் எங்கும் நிரம்பி நிற்கும் பொருள். இதுவும் நமது கண்களுக்கு வெட்டவெளியாய் தெரிவது. இதை பௌதீக விஞ்ஞானிகள் matter என்பர்.
ஆகாசம் சூட்சமமான பொருள். அது சூட்சுமமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரிவதில்லை.
அது ஸ்தூல வடிவமாகும்பொழுத
ு அதாவது உருவம் பெற்று பொருளாகும் பொழுது கண்களுக்கு தெரிகிறது.
இயக்கத்துக்குக் காரணமாயிருக்கும் மற்ற மூலப்பொருள் பிராணன்
சிருஷ்டியின் துவக்கத்திலும் பிரளயத்திலும் அண்டத்திலுமுள்ள சக்திகளெல்லாம் ஒடுங்கிப்போய் பிராணன் என்னும் மூலநிலையை அடைகின்றன.
பிராணன் அசைவதற்கான வீரியத்தைக் கொடுக்கும் உயிராதாரமான விசை, அதிர்வுகளை (Vibration) ஏற்படுத்தி இயக்கத்தைப் பிறப்பிப்பது பிராணன்.
ஆகாசத்தை பிரபஞ்சமாக உருவாக்குகின்ற சக்திதான் பிராணன். இதையே பௌதீக விஞ்ஞானிகள் Energy என்பர்.
பிரளயத்தின் போது ஸ்தம்பித்த நிலையை அடைகின்ற பிராணன் சிருஷ்டியின் போது ஆகாசத்துடன் ஒன்றிச்செயற்பட்டு அண்டத்தை தோற்றுவிக்கிறது.
ஆகாசத்தின் மீது எனைய நான்கு முதன் மூலப்பொருள்கள் (Primordial Elements – பூதங்கள்) ஆகிய மண், நீர், காற்று, நெருப்பு என்பவை செயற்படுவதால் சிருஷ்டிக் காரியங்கள் நடைபெறுகின்றன.
இச்செயற்பாடுகளுக்கு வேண்டிய அதிர்வுகளை பிராணனே ஏற்படுத்திக் கொடுக்கிறது.
மனித உடலில் கோடானுகோடி ஜீவ அணுக்கள் இருக்கின்றன. இந்த ஜீவ அணுக்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்
குள் அமைந்து ஒரே நோக்குடன் செயற்படுவதற்குக் காரணம் உடலில் உள்ள பிராணன்.
உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் இந்த ஜீவ அணுக்கள் ஒன்றிணைந்து இயங்கும் தன்மையை இழந்தவிட்ட நிலையில் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றன.
இறப்பின் பின்னும் உயிரணுக்கள் உடலில் இருப்பதால்தான் பிணத்தைப் பேணும் செயல்முறை சாத்தியமாகிறது உடல் அழுகுவதற்கும் அதுவேதான் காரணம்.
# அபானன்
************
கீழ் நோக்கிச் செல்லும் (நாபிக் கமலத்திலிருந்து
) மற்றும் குதம் போன்ற இடங்களில் உள்ள வாயுவிற்கு அபானன் என்று பெயராகும். பிறப்புறுப்புக்களில் இவ்வாயு இருக்கும். நம் உடலில் கழிவுப் பொருட்கள் வெளியேற்றுவதற்கும் இந்த வாயுதான் காரணமாக உள்ளது.
# வியானன்
*************
உடலிருந்து எல்லாப் பக்கங்களிலிருந்
து செல்கின்ற மற்றும் உடலில் எல்லாப் பக்கங்களிலும் உள்ள வாயுவிற்கு (உயிர்ச் சத்திற்கு) வியானன் என்று பெயர்.
எது பிராணன் – அபானன்களின் இடையே உள்ளதோ அது வியானன் எனும் வாயு ஆகும். மிகவும் முயற்சியுடன் செய்ய வேண்டியுள்ள கடினமான செயல்களை மூச்சு விடாமல், மூச்சை இழுத்துக் கொள்ளாமல் செய்யும் பொது இந்த வாயு செயல்படுகிறது.
# உதானன்
************
மேல் நோக்கிச் செல்லும் மற்றும் வெளியிலும் செல்லும் தன்மையுடையது உதானன் எனும் வாயு. இது தொண்டையில் நிலை பெற்றுள்ளது. உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்லும் பொழுது உதவிபுரியும் (உயிர் சத்திற்கு) உதானன் என்று பெயர்.
மரணம் ஏற்படும் பொழுது உயிர்,? உடலைவிட்டு வெளியேறுவதற்கு உத்கிராந்தி என்று பெயராகும். சீவன் (உயிர்) கண் போன்ற எந்த துவாரத்தின் மூலமாகவும் வெளியேறலாம். இருப்பினும் தொண்டையானது பொதுவாக சீவன் (உயிர்) உடலை விட்டு வெளியேறும் இடமாக உள்ளது.
# சமானன்
************
சமானன் எனும் இவ்வாயு உடலின் நடுப்பகுதியில் உள்ளது. உண்ட உணவையும் குடித்த நீர் போன்றவற்றை சமமாக்க் கலந்து உணவை செரிக்க வைக்க உதவும் இவ்வாயுவை சமானன் என்பர்.
மனம் - உறக்கம் - நரம்பியல் சார்ந்த மூளையின் இயக்கங்களில், பாதிப்பின்றிப் பணியாற்ற உதவும் வாயு இதுவாகும்.
# உப_வாயுக்கள்
# நாகன்
*********
தமிழ் சித்த மருத்துவ நூல்களில் நாகன் வாயுவை "விழிக் காற்று' என்று குறிப்பிடுகின்றனர். நமது கண்களுக்கு பார்வையைக் கொடுப்பது நாகன்தான்.
நாகன் வாயுவின் அளவு குறையக் குறைய பார்வைத் திறனும் குறையும். தொண்டைப் பகுதியில் நாகன் செயல்புரிந்து வாந்தி உருவாகவும் காரணமாகிறது.
உடலுக்கு ஒவ்வாத ஏதேனும் உடலுக்குள் நுழைந்துவிட்டால், அதை வாந்தி மூலமாக உடலைவிட்டு வெளியேற்றுவது நாகனின் பணியாகும்.
இவை தவிர, சோம்பல் முறித்தல், முக்குதல், திமிறுதல் போன்றவையும் நாகனின?் தூண்டுதலால்தான் நிகழுகின்றன.
# கூர்மன்
**********
கூர்மன் வாயுவின் தமிழ்ப் பெயர் "இமைக் காற்று' என்பதாகும். நமது கண் இமைகளின் இயக்கத்திற்குக் காரணமான வாயு இது.
கண்களைத் திறந்து மூடுதல், கண் இமைத்தல் போன்றவை கூர்மன் வாயுவின் செயல்களாகும். இவை தவிர-
மயிர்க்கூச்செறிதல்
சிரித்தல்
முக லட்சணம்
ஆகியவையும் கூர்மன் வாயுவின் பணிகளாகும்.
# கிருகரன்
************
தும்மலை வரவழைக்கும் காற்று கிருகரனாகும். தமிழில் இதைத் தும்மல் காற்று என்றே அழைக்கின்றனர்.
தும்மல் என்பது உடலைப் பாதுகாக்கும் ஒரு தடுப்புச் செயலாகும். நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்றோடு சேர்ந்து தூசி, பலவகையான மாசுக்கள், நோய் உருவாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவையும் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்கள் மூக்கின் வழியே உடலினுள் சென்றுவிடும்போது, அதை உடனடியாக உடலைவிட்டு வெளியேற்றிவிடவே தும்மல் உருவாகிறது. ஓங்கித் தும்மும்போது உடலுக்கு ஒவ்வாதவை வேகமாக வெளிவரும் காற்றோடு சேர்ந்து உடலைவிட்டு வெளியே தள்ளப்பட்டு விடுகின்றன.
கிருகரன் வாயு நலமாக இயங்கினால் மட்டுமே இந்தப் பணி சரிவர நடைபெறும். பலவகையான நோய்களிலிருந்து உடல் பாதுகாக்கப்படும்.
கிருகரன் வாயு சரியாக இயங்காதபட்சத்தில் காற்றின் வழியே பரவும் தொற்று நோய்கள் (உதாரணமாக - காச நோய், இன்புளுயன்சா காய்ச்சல் போன்றவற்றைக் கூறலாம்) உடலைத் தாக்கும்.
# தேவதத்தன்
***************
தமிழில் இந்தக் காற்றை கொட்டாவிக் காற்று என்கிறோம். கொட்டாவி விடுதல், விக்கல் போன்றவற்றிற்கு காரணமாக அமைவது தேவதத்தன் எனும் வாயுவே.
மூளை சோர்வடையும்போது, குறிப்பாக மூளைக்குத் தேவையான அளவில் பிராணவாயு கிடைக்காதபோது கொட்டாவி வரும். சிலருக்கு விக்கல்கூட ஏற்படலாம்.
மூளைக்குத் தேவையான அளவில் குளுகோஸ் (சக்தி) கிடைக்காத போதும் மூளைச் சோர்வு ஏற்படும். கொட்டாவி, விக்கல் போன்றவை ஏற்படும்.
மூளையின் இயக்கங்களோடு நெருங்கிய தொடர்புடைய வாயு தேவதத்தன்.
இந்த வாயுவின் அளவில் அல்லது இயக்கத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது மூளையின் இயக்கத்தையும் பாதிக்கும்.
# தனஞ்செயன்
*****************
கோமா போன்ற மயக்க நிலை, சுய நினைவற்ற நிலை ஆகியவற்றை உருவாக்குவது தனஞ்செயன் வாயுவாகும். தனஞ்செயன் வாயுவின் இயக்கத்தில் அல்லது அளவில் குறைபாடுகள் தோன்றும்போதுதான் இவை ஏற்படும்.
ஒரு மனிதன் இறக்கும்போது பிற ஒன்பது வாயுக்களும் உடலைவிட்டு வெளியேறிவிடும். தனஞ்செயன் வாயு மட்டுமே மூன்று நாட்கள் வரையில் உடலில் தங்கி நிற்கும்.
மூன்று நாட்களுக்குப் பின்னர் தனஞ்செயன் வாயு கபாலம் வழியாக வெளியேறும். (கபாலத்திலுள்ள பிரம்மரந்திரம் என்ற ஓட்டையின் வழியாக தனஞ்செயன் உடலை விட்டு வெளியேறும்!) மூன்று நாட்களுக்கு முன்னரே உடலை எரித்துவிட்டால் உடனே அந்த வாயு வெளியேறிவிடும்.
இறந்த உடல்களை வீங்க வைப்பதும், அழுக வைப்பதும் இந்த தனஞ்செயன் வாயுவே!
ஒரு பெண் குழந்தை பெறும்போது, அந்தக் குழந்தையை கருப்பையிலிருந்து உந்தி வெளியே தள்ளுவது தனஞ்செயன் வாயுவே! தனஞ்செயன் வாயுவின் அளவில் அல்லது செயல்பாட்டில் குறை இருந்தால் சுகப்பிரசவம் நடப்பது கடினமாகும்.
# பிற_வாயுக்கள்
******************
இந்த பத்து வாயுக்கள் (தச வாயுக்கள்) தவிர வேறு சில வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவற்றுள் முக்கியமாவை என கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
முக்கியன்
வைரவன்
அந்திரியாமி
பிரவஞ்சனை
இவற்றின் செயல்பாடுகள் குறித்து சில வரிகளில் சுருக்கமாகக் காணலாம்.
# முக்கியன்
*************
இந்த வாயு கைப் பகுதியில் செயல்படும் ஒரு வாயுவாகும்.
உடலின் உள்ளுறுப்புகளுக்குத் தேவையான சக்தியைத் தருவது இந்த முக்கியனின் பணியாகும்.
முக்கியன் வாயு சரிவர இயங்காதபோது நமது உள்ளுறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்படும். அவற்றின் செயல்திறன் குன்றும்.
பல நோய்கள் உருவாகும்.
# வைரவன்
**************
கபத்தை உருவாக்குவது இந்த வைரவனே.
இருமலுக்கும் காரணமாகிறது.
தும்மலைப் போன்று இருமலும் ஒருவகை பாதுகாப்புச் செயலே.
நுரையீரல்களினுள் அல்லது மூச்சுக் குழலினுள் நுழைந்துவிட்ட மாசுகளையும், நோய்க் கிருமிகளையும் உடலிலிருந்து வெளியேற்றவே இருமல் உருவாகிறது. உடல் பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுக
ிறது.
வைரவன் வாயுவின் அளவில் அல்லது செயல்பாடுகளில் குறைவு நேரும்போது இருமல் வழியே இவை வெளியேற்றப்படுவது சரிவர நிகழாது. இதனால் உடல் பல பாதிப்பு களுக்கும் நோய்களுக்கும் உட்படும் அபாயம் உருவாகும்.
# அந்திரியாமி
****************
அந்திரியாமி வாயுவின் பணி பிராணனை உருவாக்குவதாகும்.
அந்திரியாமி வாயு குறைபட்டால் அல்லது சரிவர இயங்காது போனால் உடலில் பிராண சக்தி உற்பத்தி குறைபடும்.
உடல் வலுவிழக்கும்.
உடற் சோர்வு, மூளைச் சோர்வு போன்றவை ஏற்படும்.
எந்த வேலைகளையும் முழுமையாகச் செய்து முடிக்க முடியாது.
மூச்சுத் திணறல், நடந்தால் மூச்சு இரைப்பது போன்ற பல நோய்கள் உருவாகும்.
ஆஸ்துமா போன்ற நோய்களின் தீவிரம் அதிகமாகும்.
# பிரவஞ்சனை
****************
உடலினுள்ளே இருக்கும் பிரணவ சக்தியை உருவாக்கும் வாயு பிரவஞ்சனை வாயுவாகும்.
பிரணவ சக்தியே அனைத்து சக்திகளுக் கும், படைப்புகளுக்கும் ஆதாரமான ஆதி சக்தி.
உயிருக்கு ஆதாரமாக இருப்பதும் இந்த பிரணவ சக்தியே.
இந்த பிரபஞ்சம் முழுவதுமே நிறைந்து
நிற்கும் ஆதார சக்தியையே, அனைத்தும் உருவாகக் காரணமாக இருந்த ஆதிபர சக்தியையே பிரணவ சக்தி என்கிறோம்.
பிரபஞ்சத்தில் நிறைந்திருப்பது
போலவே நமது உடலினுள்ளும் இந்த பிரணவ சக்தி நிறைந்துள்ளது.
இந்த பிரணவ சக்தி நலமாக இயங்க பிரவஞ்சனை வாயுவின் துணை அவசியம்.
பிரவஞ்சனை சக்தியின் அளவு குறைந் தால் அல்லது அதன் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் தோன்றினால் பிரணவ சக்தியின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.
அந்திரியாமி, பிரவஞ்சனை ஆகிய இரு வாயுக்களும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத வாயுக்களாகும் என்ற குறிப்பு சில தந்திர யோக நூல்களில் உள்ளன. ஆகவே இந்த இரு வாயுக்களும் முதன்மை வாயுக்கள் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கருதப்படுகின்றன.
(குறிப்பு
-உடலில் இயங்கும் அனைத்து வாயுக்களும் இணைந்து உருவானதே நமது பிராணமய கோசம் என்ற இரண்டாவது சக்தி உடலாகும்.)
(நமது தொன்மையான தந்திர யோக நூல்களிலும், மருத்துவ நூல்களிலும் இந்த வாயுக்கள் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
உடலை உயிர் பிரியும்போது தச வாயுக்களின் பங்கு :
இந்த உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட
்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.
மனித உடலில் பத்துவித வாயுக்களான பிராணன் அபானன், உதானன் , சமானன் , வியானன் முதலிய இவையே மனிதனின் அனைத்து இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன.
உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.
நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.
சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .
ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் .
மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .
(உயிரற்ற உடல்களை சில மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும்)
# ஞானேந்திரியங்களின்_செயல்கள்
ஒலி
தொடு உணர்வு
வெளிப்புற காட்சிகள்
சுவையுணர்வு,
வாசனை
எனும் ஐந்து உணர்வுகளும் சூட்சும உடலின் பாகங்கள் ஆகும.
(ஞானேந்திரியங்கள் வெளி உலக பொருட்களைக் குறித்த அறிவை நமக்கு தரும் உடல் உறுப்புக்களுக்க
ு ஞானேந்திரியங்கள் ஆகும்.கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல் ஆகிய உடல் உறுப்புக்களின் மூலம் வெளி உலக அறிவை நாம் அடைவதால், இந்த இந்த உடலுறுப்புக்களுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர்.)
இவை அனைத்தும் மனிதனின் சூட்சும தேகமாகும்.-

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.