Thursday, 16 June 2016

இலக்கை நோக்கி

🌺🌺
இலக்கை நோக்கி பயணித்தேன்
பயணத்தில் வந்தது தெளிவு
இப்போது பயணமே இலக்கு.......!!!

தேர்வில் வெல்லப்பாடம் படித்தேன்
வென்றபின் வந்தது அறிவு
வெல்ல வேண்டியது தேர்வல்ல,
தன்னை என்று........!!!

பதில் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்
படிக்கப் படிக்க வளர்ந்தது கேள்வி
இப்போது படிப்பே கேள்வியாகிப் போனது......!!!

மற்றவர் பாராட்டவே ஆசைப்பட்டேன்
ஆசைப்பட்டு உழைத்ததில் புரிந்தது
உழைப்பே உண்மைப் பாராட்டு என்று.....!!!

குடும்பத்திற்காக செல்வம் சேர்த்தேன்
சேர்த்தபின் வந்தது தெளிவு
இப்போது குடும்பமே செல்வம் என்று......!!!

குழந்தையைக் கடிந்தேன் பொறுமையில்லையென்று
அழுகை நின்றபின் புரிந்தது
எனக்குத்தான் இல்லை பொறுமை என்று.....!!!

நிம்மதிதேடி வெளியில் அலைந்தேன்
அலைந்து களைத்தபின் புரிந்தது
உள்ளே பெறுவதுதான் நிம்மதி என்று.....!!!

சுத்தம் வேண்டி கங்கையில் மூழ்கினேன்
மூழ்கி எழுந்ததும் தெரிந்தது
சுத்தம் கங்கையில் இல்லை என்று......!!!

முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்
மாறியபின் வந்தது தெளிவு
நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம் என்று......!!!

தனிமைக்கு பயந்து கூட்டம் தேடினேன்
கூட்டத்தில் இருக்கையில் புரிந்தது
தனிமை மனதினுள்ளே என்று

விரதங்களிருந்து மலைகளேறினேன் இறைவனைத்தேடி
தேடிக்களைத்தபின் வந்தது ஞானம்
தேடவேண்டிய இடம் உள்ளேயென்று.....!!! 🌺🌺

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.