Saturday, 18 June 2016

பிரச்னைகள்

☘🍀☘🍀☘☘🍀☘

பிரச்னையை
ஓரமாக
நகர்த்தி வை.

  "ஓய்வான"
சில கணங்களை அனுபவிக்க ஆரம்பி.

ஒரு பிரச்னை
அங்கு
இருந்தாலும்கூட

– அது -
அங்கிருப்பதை
       நீ உணர்கிறாய்,

அது அங்கில்லை
என சொல்லவில்லை.
அது அங்கிருக்கிறது –
அதை
ஓரமாக
நகர்த்தி
வைத்துவிட்டு,
அதனிடம் காத்திரு,

வாழ்வு இருக்கிறது,

முழு வாழ்வும்
காத்திருக்கிறது.

ஆனால் இப்போது

எந்த பிரச்னையும் இல்லாமல்
சிறிது நேரம்
இருக்க
என்னை அனுமதி
என்று கூறு.

சில கணங்கள் 
எதுவும் இல்லாமல்
இருந்து பார்.

ஒருமுறை
நீ
அதை
அனுபவித்து விட்டால்

பின் பிரச்னைகள் உன்னால் உருவாக்கபட்டவைதான்

எனும் 
உண்மையை
நீ
உணர்வாய்.

ஏனெனில் 
உனக்கு

"எதுவுமின்றி "

இருக்கும்

கணங்களை

"அனுபவிக்க தெரியாததால்"

அந்த
இடங்களை பிரச்னைகள்
நிரப்பிக் கொள்கின்றன.
🎋🌳🎋🌳🎋🌳🎋🌳🎋

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.