Friday 24 June 2016

முடக்கு வியாதி குணமாகும்.

“முடக்கு வாதம்”  (Rheumatism)
           கை,கால் முட்டிகளில் வீக்கம், வலி

                உஷ்ண மிகையினால் பிரிக்கப்பட்ட நீர், முட்டிகளில் தங்கி இப்பிணி மிக்க உபத்திரவத்தைக் கொடுக்கும். இதற்கு முடக்குவாதம் என்பர்.சிலர் தோள்களில் கண்ணுக்குத் தெரியாத வீக்கங்கண்டு கைதூக்க முடியாமல் சங்கடப்படுவர். கையை ஆட்டும்போது பொறுகஂக முடியாத வலியுமிருக்கும் இதற்கு ஆங்கில மருத்துவத்தில் Rheumatism, Arthritis என்பர். ரத்தக்குறைவினாலும்  நரம்பு தளர்ச்சினாலும் அல்லது மனச் சஞ்சலத்தினாலும் இப்பிணி  வருவதுண்டு. கணுக்களில் வலியும் வீக்கமும் ஏற்படுவதுண்டு.

                இப்பிணிக்கு முதல் மருந்து, புலால் உண்ணுவதை நிறுத்துவதே. புலாலில் 100-க்கு 90-பங்கு அழுக்குத் தண்ணீர் உள்ளது. சுலபமாய் சீரணிக்ககூடிய காய்கறிப் பொருட்களையே உபயோகம் செய்யவேண்டும். மனக்கவலைகளை ஒதுக்கி வைக்கவேண்டும்.

இதற்கு அனுபவ வைத்தியம்:

               முடக்கத்தான் மூலிகை இலை ஒரு கைப்பிடி, தோல் நீக்கிய சுக்கு 10-கிராம். ஒரு ஆழாக்கு துவரம்பருப்பை வறுத்து தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, சோம்பு கொஞ்சம் போட்டு நன்றாய் வெந்த பிறகு வடித்து மிளகுப்பொடி, உப்பு கொஞ்சம் சேர்த்து சூப் மாதிரி சாப்பிடவும். காலை மாலை ஐந்து நாட்கள் சாப்பிடவும். பத்து நாட்கள் சாப்பிட்டாலும் குற்றமில்லை முடக்கு வியாதி குணமாகும்.
                                                    நன்றி
              

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.