Sunday, 19 June 2016

ஆன்மீகம்

ஆன்மீகம் என்பது
ஒருங்கிணைத்துப் பார்ப்பது
அறிவியல் என்பது
தனித்தனியாக பார்ப்பது
இவ்வளவுதான். இதை சரியாக
பிடித்துக் கொண்டால்
ஆன்மீகம் என்பது எளிதில்
விளங்கிவிடும்.
ஆன்மீகம் என்பது
வேறொன்றுமில்லை,
உடல்நலம், உயிர்நலம், மனநலம்,
சமுதாயநலம் இவை ஒன்றுக்கு
ஒன்று முரண்படாமல் இனிமை
காத்து வாழ்வது என்பதுதான்.
இதில் பல சாதனைகளும்
சாதரணமாகிவிடும்.
இதற்கு உதவவே வேதங்கள்,கலைகள்,
புராணங்கள் என்று புரிந்து
கொண்டு பார்த்தால்
எல்லாம் சரியாக இருப்பது
தெரியவரும்,
மனதிற்குத்தான்
எல்லாமுமே.மனம்
சிலசமயம்
சொன்னதைக்கேட்கும்,
சில சமயம்
முரண்டுபிடிக்கும்,அலையும்,
எப்படி வேண்டுமானாலும்
மாறும், இதை கட்டுக்குள்
கொண்டுவந்து
இந்த உயிரும், உடலும் மேன்மை
அடையவே இந்த
வேதங்கள்,கலைகள்,
புராணங்கள், மதங்கள்
அனைத்தும்
மனம் அடங்கிவிட்டதா,?
அன்பாகவே, கருணையாகவே
மாறிவிட்டதா,? இனி எச்
சூழலிலும் இதிலிருந்து
மாறாதா?
அப்படியானால்
உங்களுக்கு
சொல்லப்பட்டதல்ல
வேதங்கள்,கலைகள்,
புராணங்கள்.! இனி
உங்களுக்கு அவை தேவையுமில்லை.
மனதோடு போராடிக்
கொண்டு இருப்பவருக்கே
இவையெல்லாம் தேவை
ஆன்மீகத்தை சரியாக புரிந்து
கொண்டால் நமக்கு
நாமே பிணக்கு, அல்லது பிறரிடம்
சமுதாயத்திடம் பிணக்கு என்பது
எழாது. அப்படி எழுந்தால் நாம்
சரியாக புரிந்து
கொள்ளவில்லை என்பதே
உண்மை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.