Friday, 17 June 2016

வன்னிமரத்தின் சிறப்பு


வன்னிமரத்தின் சிறப்பு

✰ வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர;க்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.

✰ வன்னிமரம் பூக்காது. காய் காய்க்காது. இது ஒரு அற்புதமான மரம். இது வெற்றியை தேடி தரும் மரம். இது சிவாலயங்களில் இருக்கும். நம்மை ஆளும் உமாதேவி வன்னி மரத்தடியில் தான் வாசம் செய்கிறாள்.

✰ வன்னி மரத்தடியில் விநாயகர; இருப்பது சிறப்பு வாய்ந்தது. பால், பன்னீர;, இளநீரால் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டால் கணவன், மனைவி கருத்து வேறுபாடு மறைந்து, குடும்பம் ஒற்றுமை பெறும். குழந்தை பேறு கிட்டும். வன்னி மரத்து விநாயகரை வழிபட அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

✰ ராமபிரான், இராவணுடன் போருக்கு செல்லும் முன், வன்னி மரத்தை வணங்கி விட்டு, சென்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. வன்னிமரம் சிவ பெருமானின் அம்சம். இந்த மரத்தடியில் தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும்.

✰ வில்வத்திற்கு அடுத்தது வன்னிமரம் தான் சிவனுக்கு உரியது. வில்வ மரம் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததோ அந்த அளவுக்கு வன்னி மரமும் சிறப்பு வாய்ந்தது. சிவனுக்கு பிடித்த மரங்களில் வன்னி மரமும் ஒன்று.

✰ வன்னிமர இலையை வடமொழியில் சமிபத்ரம் என்று கூறுவார;கள். இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும். விஜயதசமியின் போது துர;க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.