Thursday, 16 June 2016

புகழ்ச்சி - அனுபவ பகிர்வு

புகழ்ச்சி - அனுபவ பகிர்வு

புகழ்ச்சி என்பது ஒரு செயல் செய்த பின் அந்த செயலுக்கு அங்கிகாரம் இந்த மனம் தேடுவது

செய்த செயலை மறந்து அடுத்த செயலுக்கு செல்லும் பொழுதும் - செயலை நான் தான் செய்தேன் என்ற எண்ணம் இல்லாமல் செய்த செயல்கள் எவ்வித அங்கீகாரம் வந்தாலும் -அதை கண்டு கொள்ளாத நிலையில் மனம் தாண்டிய பக்குவ நிலையில் இருக்கும் புகழ்ச்சியை

உண்மையில் புகழை பற்றிய தெளிவு கிடைக்க வேண்டும் என்றால் உனக்கு வரும் புகழை ரசித்தால் தான் அதன் நுட்பத்தை கண்டு கொள்ள முடியும் - அதை நீ வெறுத்தால் இன்னும் அது ஆணவத்தீனிக்கு உணவு போடும் தன்மை தான் வளரும்

அதாவது ஒரு கட்டத்தில் இந்த புகழ் மூலம் பெற்ற போதையின் மூலம் கண்ட சுகம் மற்றும் அதில் ஏற்படும் ஆணவம் இதன் மூலம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இந்த ஏற்றத்தாழ்வு அடிப்படையில் இருந்து மனம் அதன் தன்மையை இழக்கும் அனுபவ பக்குவம் மூலம் வருகின்றது

அதாவது மனம் என்ற நிலையில் தான் இந்த இரண்டு வித தன்மை நிகழ்கிறது - அது இல்லாமல் செயல் படும் பொழுது அங்கு செயல் மட்டுமே இருக்கும் செயல் செய்பவன் மறைந்த நிலையில் இருக்கும் தன்மை

இன்னும் தெளிவாக சொன்னால் நமக்கு உள்ளே இருந்து ஒரு உணவை ஜீரணம் செய்ய எந்த ஒரு கண்ணுக்கு தெரியாத ஒரு இறை சக்தி உணர்வு செயல்படுகிறதோ

அது போல நீ செய்யும் செயல் எதுவும் நீ செய்யவில்லை அதற்கு அப்பால் இருக்கும் இருப்பு or இயற்கை or கடவுள்தன்மை தான் செய்கின்றது - செயல் செய்யும் நீ அந்த செயலுக்கு ஒரு கருவி மட்டுமே என்ற உள் நிலை மாற்றம் மூலம் வருவது ஆகும்

ஆனால் பெரும்பாலன செயல்கள் நான் தான் செய்தேன் - நான் தான் உருவாக்கி உள்ளேன் - நான் இல்லை என்றால் அது நடந்து இருக்காது அல்லது வாங்கி இருக்க முடியாது என்ற தன்முனைப்பு கொண்ட புகழ்ச்சி மற்றும் பெருமைகளை தேடி கொள்கின்றது

இந்த தெளிவு எப்படி வந்தது எனில்

வாழ்வில் கண்ட அனுபவ உதாரணங்கள்

------------
நான் எனது dressing sense சின்ன வயதில் இருந்து trend கு தக்கவாறு போட்டு கொண்டு அதற்கென ஏகப்பட்ட fans உருவாகி என்னை புகழ ஆரம்பித்த பொழுது

Cricket ல bowling நன்றாக போட்ட பொழுது உருவாகிய புகழ்

எனது வேலைகளை கேள்வி கேட்க கூடாது என்ற நோக்கத்தில் முழுமையாக செய்யும் பொழுது சொல்லுகிற புகழ்

பொறுப்பான அமைதியான பையன் என்று சொல்லிய பொழுது ஏற்பட்ட புகழ்

ஆன்மீக வகுப்பு எடுக்கிற தருணங்களில் வர கூடிய விளக்கம் கேட்டது மூலம் அவர்கள் வெளிப்படுத்திய புகழ்

ஆன்மீக விழாக்கள் ஏற்பாடு செய்து அதன்  மூலம் ஒரு 400 பேர் முன்பு பேசிய பேச்சுக்கள்  மூலம் வந்த புகழ் 

உன்  எழுத்துக்கள் பல பேரின் வாழ்க்கையை மாற்றி உள்ளது - நீ செய்யும் ஆன்மீக சேவை விலை மதிப்பு இல்லாதது - உன் எழுத்துக்களை புத்தகம் ஆக்கு என்று பல பேர் சொல்லிய போது - நீ ஒரு ஞானி ஆகி விடுவாய் - கிட்ட திட்ட அப்படி தான் இருக்கிறாய் என்று சொல்லிய தருணங்களில் என் மனம் என்னை அறியாமல் மயங்கியதை நான் உணர்ந்தேன்

இது எல்லாம் ஒரு அடி முட்டாள் என்று உணர்ந்தேன் - அதன் மூலம் எனக்கு உள்ளே காட்சி அளித்த ஆணவ வெளிப்பாட்டினை கவனித்து கண்டு முட்டாள் -என என்னை நான் வெளிப்படையாக திட்டி கொண்ட நாட்கள் உண்டு - சிரித்த நாட்கள் உண்டு

எப்படி உணர்ந்தேன் என்றால்  - எந்த செயலை செய்யும் பொழுதும் - ஆன்மீக செயல்கள் செய்யும் பொழுது  நான் எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் மனம் விரிந்த நிலையில் பல்வேறு உணர்வுகள் மூலம் வெளிப்படுகிறது அதன் மூலம் வெளியில் இருந்து வரும் புகழ் கொண்ட கருத்துக்கள் எப்படி மாற்றி அமைக்கின்றன என்பதை ஆழமாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்

அதன் மூலம் உனது மன விரிவு எப்படி சுருங்கி கொள்கின்றது என்ற ஆய்வை திரும்ப திரும்ப ஏற்படுத்தி கொண்டே இருந்தேன் பின்பு அதில் ஒவ்வொரு கால கட்டத்திலும்- அவ்வப்போது நான் என் கோமாளி தனமான  மனதை உடைத்து தெளிவு பெற்றுக் கொண்டே இருந்தேன்

ஒவ்வொரு செயலும் இறை உன்னிடம் இருந்து உன் மூலம்  செயல் படுகின்றது இறை என்ற இயற்கை தான் - அதற்கு நீ உரிமை தேடி கொள்ளாதே - அப்படி நீ தேடினால் உன் ஆணவம் வளர்ந்து அழிந்து கொண்டே செல்வாய் - வாழ்வை இழப்பாய் என்ற தெளிவுகள் கிடைத்தது

நீ செய்யும் நல்ல விஷயங்கள் மூலம் வெளியே இருந்து வர கூடிய கருத்துக்களை உனது உள் இருப்பில் இருக்கும் இறைக்கு  சமர்ப்பணம் செய்யும் பக்குவத்தை வளர்த்திக்கொள்

அந்த பக்குவம் உனது ஆழ்ந்த தியானம் மூலமே வருகின்றது - அப்படி இல்லையேல் உனது மனம் உன்னை எளிதில் ஏமாற்றி விடும்

உனது புகழ்ச்சியை சமன் செய்ய எதிர்பார்ப்பு கொண்டோ , நீ தான் செய்கிறாய், அந்த செயல் உனக்கு சொந்தமானது என்ற தன்மையை தாண்டி அது உன் வடிவில் இருக்கும்  இறை என்ற உள் நிலை மாற்றம் நிகழும் பொழுது சாத்தியம்

தியானம் செய்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.