Friday, 17 June 2016

சந்திரகலை என்றால் என்ன?

🌙🌜🌙🌜🌙🌜🌙🌜🌙

சந்திரகலை என்றால் என்ன?

இடது நாசிச்(
இடது பக்க மூக்கு)
சுவாசம் சந்திரகலை எனவும்,
வலது
நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம்
சூரியகலை எனவும் அழைக்கப்படும்..

சந்திரகலையை மதி/இடகலை/
இடைக்கால் எனவும்,

சூரியகலையை
பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும்
அழைக்கப்படுவதுண்டு.
🌙

இங்கு 'கால்' என்பது மூச்சைக்
குறித்து நிற்கின்றது.

அதனால் தான்
'காலனைக் காலால் உதைத்தேன்' எனச்
சித்தர்களும் ஞானியரும்
கூறுவதுண்டு.

இங்கு
காலனா
கிய இறப்பை,
காலாகிய
மூச்சுக்காற்றைச் சுழிமுனையில்
ஒடுங்கச் செய்வதன் மூலம்...
🌕
பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு
பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/
சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.
🌕

'விதியை மதியால் வெல்லலாம்'
என்பார்கள்.

இங்கு மதி என்று
கூறப்படுவது புத்தி அல்ல.
மதி
என்றால் சந்திரன். 🌕

16 அங்குலம்
ஓடக்கூடிய சந்திரகலையை
சுருக்க
சுருக்க ஆயுள்🌖 விருத்தியாகும்.

எனவே விதி முடிவும் விலகியே
போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு;

மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு,
நேரம் . ⏱

உள்ளே அதை தங்கவைப்பது 4
பங்கு நேரம். ⏱

மூச்சை வெளியே
விடுவது 2 பங்கு நேரம்.

இதுதான்
பிராணாயாமத்தின் சாராம்சம்.⌛

நமது நுரையீரலில் வலது, இடது என
இரு பகுதிகள்.

வலது நுரையீரலில் 3
பகுதிகள்,
இடது நுரையீரலில் 2
பகுதிகள்.

நுரையீரல் 'ஸ்பாஞ்' போல
காற்றுப் பைகளால் ஆனது.

வலதுபக்கம்
சாய்ந்து படுக்கும்போது, வலது
நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும்
அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக
மூச்சுக்காற்று ஒரே சீராக
உள்ளிழுக்கப்பட்டு
உடல் முழுக்க
'பிராணா' சக்தி
சீராகப் பரவுகிறது .🔻

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு ,
'சந்திரகலை'. 🔹
இது குளுமையானது .

வலது நாசி வழியாக ஓடும் மூச்சு ,
'சூரியகலை'. 🔷

இது வெப்பமானது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது
குளுமையான

'சந்திரகலை'
அதிகரிக்கும்.🔺

இது மன படபடப்பைக்
குறைத்து தூக்கத்தையும்
வரவழைக்கும்.🔺
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.