Thursday, 16 June 2016

விழிப்புநிலை

*விழிப்புநிலை*

அறிவு கொண்ட மனிதன், விழிப்புள்ள ஒரு மனிதன், ஒரு புத்தர், தான் ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரத்திலும் பங்கு கொண்டவன் என்பதைப் பிரஞ்ஞையோடு அறிவார்கள்.

ஒவ்வோர் மரமும் ஒவ்வோர் இலையும் அவனுடைய அங்கம். தனித்துவம் என்பது அங்கு இருப்பதே இல்லை. அவன் பிரபஞ்சம் ஆகிவிட்டவன்.

ஒருவன் விழிப்படைய விரும்புவதில்லை - காரணம், அது மிகப் பெரிய பொறுப்பாகி விடும்.

எவன் ஒருவன் விழிப்படைந்திருக்கிறானோ, *அவன்தான் நீதிமானாக மாற முடியும்*, நீதி என்று சொல்வது எந்தக் கருத்தில் என்றால், அவன் மூலமாக எந்தத் தவறும் இருக்காது என்பதில் தான்.

அவன் தவறுகளைத் தவிர்க்கிறான் என்பதல்ல, அவன் நல்லது செய்ய முயற்சிக்கிறான் என்பதல்ல.

இப்போது நல்லது செய்வதற்கு எந்த முயற்சியும் இருப்பதில்லை.

தவறுகளைத் தவிர்ப்பதற்கும் எந்த முயற்சியும் இருப்பதில்லை.

*விழிப்போடு இருக்கும் போது, எது உண்மையோ, எது நல்லதோ, எது சரியோ, அது நிகழ்கிறது*.

அப்போது உண்மைக்கு மாறானது, பாவம், கெட்டது எதுவும் நிகழ்வதில்லை.

இது எப்படி என்றால், ஒரு அறையில் மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்கும் போது, அங்குள்ள இருட்டு மறைந்து விடுவதைப் போலத்தான்.

ஒருவன் விழிப்படையும் போது அநீதிகளும், பாவங்களும், குற்றங்களும் மறைந்து விடுகின்றன.

*முதல் முறையாக ஒருவனுக்குப் பரிசுத்தம் உண்டாகிறது*.

இதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் இது மிகவும் *சிக்கலான விஷயம்*.

-ஓஷோ

நன்றி
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.