காத்திருக்க பழகு!
-----------------
பசிக்கும் வரை காத்திரு!
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு!
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு!
சளி வெளியேறும் வரை காத்திரு!
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு!
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு!
பயிர் விளையும் வரை காத்திரு!
கனி கனியும் வரை காத்திரு!
மரம் மரமாகும் வரை காத்திரு!
செக்கு எண்ணெய்யை பிரிக்கும் வரை காத்திரு!
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு!
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு!
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு!
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு!
உணவு தயாராகும் வரை காத்திரு!
"இது உன்னுடயை வாழ்க்கை -
ஒட்டப்பந்தயம் அல்ல!".
ஒடாதே
நில்
விழி
பார்
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு!
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததுனாலயே...
உன் வாழ்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது!
உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விச உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது!
அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே!
"நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்...
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்!"
காத்திருக்க பழகு...
வாழப்பழகுவாய்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.