எது.......?? எவ்வாறு.....??? எதற்காக....???
சுத்தவெளி தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றலினால், தன்னை உணர்வதற்காக, நானாக வந்திருக்கிறேன்.
இதை இன்னும் ஆழ்ந்து தெரிந்துகொள்ள வேண்டுமானால், மகரிஷியின் இறைத் தத்துவத்தில் இருக்கும் காந்தத் தத்துவம், அலை இயக்கத் தத்துவம், பஞ்ச தன்மாத்திரை தத்துவம், திருமுடி கடந்த நிலை தத்துவம் அனைத்தையும் அந்ததந்த புத்தகத்தின் வாயிலாக படித்து பயன் பெறலாம்.
மனோதத்துவம்
நான் என்னை உணரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது இந்த மனம்.
அந்த மனம் என்ற தடுப்பை எவ்வாறு விளக்குவது.......???
ஏன் விலக்க வேண்டும்.....???
தன்னை உணர்வதற்கு. நம்மை உணர்வதற்கு தடை நம்முடைய மனம்.
தடையை அப்புற படுத்திவிட்டால் தர உயர்வு கிட்டிவிடும்.
இதை செய்துவிட்டால் மனம் திறந்து கொள்ளும். உணர்வு கிட்டிவிடும்.
இந்த உணர்வே இறைத் தத்துவத்தையும் தன்னையும் உணர்ந்து மேன்மை அடைய முடியும்.
ஞானம் மிக எளிது. ஞானம் என்பது பலப் படிகள் கொண்ட ஒரு ஏணி போல.
பக்தி முதல் படி. அடுத்த படி ஞானம்.
முதல் படியில் இருந்து அடுத்தப் படியில் அடியெடுத்து வைத்தால் தான் ஞானதிற்குள் கால் வைக்க முடியும்.
அங்கேயே உட்கார்ந்து விடக்கூடாது. ஞானத்திற்கான படிகளை உண்டு.
அவை கிரியா யோகா, இராஜ யோகா, இப்படி. இவற்றை எல்லாம் பயின்று, தேர்ந்து மீள்வது தான் உயர்ந்த படியான ஞான நிலை.
அதுவே அந்தம். அந்த அனதத்தை அடைவதே நமது நோக்கமும் ஆகும்.
வேதாந்தத்திற்கும், சித்தாந்ததிற்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு.
புரிதலே ஞானம் என்று கூறுகிறது.
ஆனால், சித்தர்கள் உணர்தலே ஞானம் என்பார்கள்.
மகரிஷி இதை இரெண்டையும் இணைத்து மனவளக்கலை கொடுத்திருக்கிறார்.
புரிதலுக்கு விளக்கம் வேண்டும்.
உணர்தலுக்கு பயிற்சி வேண்டும்.
ஆகையால் நாமும் நமக்குள் இருக்கும் முந்தைய கருத்து தான் சரி என்று வலுவாக நிற்காமல், இங்கு சொல்லக்கூடிய கருத்துகளில் ஏதாவது சரியாக இருக்கிறதா.....??? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
தற்போது மகரிஷி இல்லை என்றாலும்கூட அவருடைய கருத்துக்கள் இன்னும் உயிரோடு தான் நம்மிடையே பல வேதாத்ரிய விழுதுகளால் வளம் வந்துகொண்டு தான் இருக்கிறது.
நமக்கு எழும் சந்தேகளுக்கு நம் சிந்தனையின் மூலமாகவோ அல்லது உணர்த்து தேர்ந்த ஞான ஆசிரியைகளின் மூலமாகவோ நாமும் உணர்வதற்கு முயற்சி செய்வோம்.
பல நேரங்களில் நமக்குள் நாம்முடைய சிந்தனையில் ஆழ்ந்து சிந்திக்கும்போது பதில் வந்துவிடும்.
சிந்திப்போம், குழப்பம் அடைந்து , குழப்பத்திலிருந்து தெளிவு பெற்று உலகம் முழுதும் வலம் வருவோம் குருவின் துணையோடு.......!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.