இந்து மத ரகசியங்கள்
1*இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.
2*சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.
3*தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.
4*முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.
5* உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.
6* அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.
7*ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.
8*அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.