Thursday, 2 June 2016

நரகம்

*நரகம்*

*நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைக் காட்டிலும் அந்த நரகம் மோசமானதாகவா இருக்கப் போகிறது?*

*ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு அர்த்தமுண்டா,இல்லையா என்று எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?ஒரு மலரின் அழகைக் கூட அவனால் ரசிக்க முடியாது.*

*பசி!இசையைப் பற்றியோ,கவிதை பற்றியோ,ஓவியம் பற்றியோ பசித்தவனிடம் பேச முடியாது அப்படிப் பேசினால் அவனை அவமானப் படுத்துவது ஆகும்.*

******

*உச்சியில் நிற்பவர் ஒரு வகையில் பலவீனமானவர்.பற்றிக் கொள்வதற்கு தலைக்குமேல் அவருக்கு எதுவும் இல்லை.*
*அதே சமயம் அவருக்குக் கீழே இருப்பவர்களோ,எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கவிழ்த்து விடக் காத்திருக்கிறார்கள்.அப்படிச் செய்தால் அவர்களில் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்குமே!*

*அதனால் உச்சியில் இருப்பவர் எல்லாவிதமான குற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது*

******
*மனிதன் யாரும் சாக விரும்புவதில்லை.தற்கொலை செய்து கொள்பவர்கள் கூட வாழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல.அடுத்த பிறவியிலாவது நன்றாக இருக்கலாம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.*

******
*உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மேலோட்டமானதுதான்.ஒரு காரோட்டி போலத்தான்.*
*காரோட்டிக்குக் காரைப் பற்றி எல்லா விசயங்களும் தெரியுமா...?*

      *ஓஷோ*

காலை வணக்கம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.