"அன்பு செய்தல் "
இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ.....???
வேறு மானுடர்....
உழாவிடினும்.....
வித்து நடாவிடினும்......
வரப்பு கட்டாவிடினும்.......
அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல்....
மண்மீது.....
மரங்கள் வகைவகையா.....
நெற்கள், புற்கள் மலிந்திருக்கு மன்றோ....???
யானெதற்கும் அஞ்சுகிலேன்,
மானுடரே,
நீவிர் என் மதத்தைக் கைக்கொண்மின்,
பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;
உணவியற்கை கொடுக்கும்;🍓🍉🍍🌿🌱🌴🌾☘
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்.....!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.