உங்களை கண்களை மறைப்பது
எது?
பகவான் இராமகிருஷ்ணா் சொன்ன கதை
ஒரு சமயம் துறவி ஒருவர் சாலை ஓரம் மரத்தடியில் சமாதி நிலையில் படித்திருந்தார். அந்த வழியாக வந்த திருடன் ஒருவன் அவரை பார்த்து இவனும் நம்மை போல் ஒரு திருடன் போலிருக்கிறது, இரவு திருடிய களைப்பில் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறான் போல. காவல்கள் கையில் அகப்பட்டால் மாட்டிக்கொள்வான் பாவம் என்று எண்ணியபடியே அங்கிருந்து புறப்பட்டான்.
அதே வழியாக குடிகாரன் ஒருவன் வந்தான், அவனும் அந்த துறவியை பார்த்தான். அவன் இங்கு கிடப்பது என்னை போல ஒரு குடிகாரன் போலிருக்கிறது. போதை தலைக்கு ஏறி நிதானம் இல்லாமல் விழுந்து கிடக்கிறான். நானும் தான் குடித்திருக்கிறேன் இப்படியா விழுந்து கிடக்கிறேன் என்று கூறியபடியே அவனும் சென்றான்.
அடுத்து சன்யாசி ஒருவர் அந்த வழியாக வந்தார். அவரும் அந்த துறவியை பார்த்தார். யாரோ ஒரு மகான் மிகுந்த களைப்பால் படுத்திருக்கிறார் என்று எண்ணியவன். அவர் திருவடிகளை வணக்கி சென்றான்.
இப்படி யார் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது அவரவரின் மனநிலையை பொறுத்து மாறுபடும். அதனால் உண்மை யாருக்கும் சரியாக புலப்படுவதில்லை. இதைப்போலத்தான் உண்மையான பக்தியும் தூய்மையும் நமக்கு தெரியவிடாமல் தடுத்துவிடுவது உலக ஆசைதான்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.