ஒரு பெரும் செல்வந்தன்
தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய்
தனக்குச் சொந்தமான தோப்பு..
வயல் வரப்புகளைப்
பெருமையுடன் காட்டி....
#இவ்வளவும்என்னுடையதுதான்...
சுவாமி...என்றான்....
அதற்கு துறவி ...இல்லையேப்பா இந்த நிலத்தை என்னுடையது என ஒருவன் சொன்னானே..என்றார்....
யார்அவன்?...எப்போது சொன்னான்?? என்று செல்வந்தன் சீறினான்....
ஐம்பது வருடங்களுக்கு முன்..
என்றார் துறவி..
அது என் #தாத்தாதான்...ஐம்பது ஆண்டுகளாக இந்த நிலத்தை
நாங்கள் யாருக்கும் விற்க வில்லையே...என்றான்...
"இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரே"???
என்று கேட்டார் துறவி...
அவர் என் #அப்பாவாக இருக்கும்... என்றான் செல்வந்தன்...
நிலம் #என்னுடையது.. #என்னுடையது.. எனக் காட்டிய
அந்த இருவரும் இப்போது எங்கு இருக்கிறார்கள்??..
எனக்கேட்டார் துறவி...
அதே வயலுக்கிடையில் தெரிந்த
இரு மண்டபங்களைக் காட்டி அங்கேதான் அவர்களைப்
புதைத்து வைத்திருக்கிறோம்...
என்றான் செல்வந்தன்..
துறவி சிரித்துக்கொண்டே...
இப்போது சொல்..
நிலம் அவர்களுக்குச் சொந்தமா??
அல்லது
நிலத்திற்கு அவர்கள் சொந்தமா?? #என்நிலம்..#என்சொத்து...
#என்செல்வம்.. என்றவர்கள் நிலத்திற்கு சொந்தமாகி விட்டனர் அவர்கள் இப்போது இல்லை..ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது... இது என்னுடையது. எனக்கூறும் நீயும் ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய்...
உன் மகன் வந்து இது
என்னுடையதுஎனக்கூறுவான்...
#இயற்கையாய்___வியாபித்திருக்கும்_இறைவன்_ஒருவனே_நிலையானவன்..
மற்றவை நிலையற்றவை......
எனக் கூறி முடித்தார்....
துறவி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.