Tuesday, 7 June 2016

மனித தோற்றம்

எதற்காக இந்த மனித தோற்றம் நிகழ்ந்திருக்கிறது......???

எது தோன்றி இருக்கிறதோ, அது அதை உணர்வதற்கு.

அது இப்படியும் தோன்றி இருக்கிறது, அதை நான் என்று சொல்லிக் கொள்கிறோம்.

இன்னும் அடுத்த கட்ட ஆராய்ச்சி ஒன்று இருக்கிறது. நான் என்ற ஒன்று இல்லை என்றும், இறைவன் என்ற ஒன்று இல்லை என்றும். அப்போ இருப்பது எது....???

அது மட்டுமே. Only that. அது எது தெரியாது.

அதை தெரிந்து கொள்வதற்கு அது இதுவாக வந்திருக்கறது.

ஏன் அது இது என்று சொல்கிறோம் என்றால், பெயர் வைத்துவிட்டால், கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவோம்.

இறைவன் என்று கூறிய உடன் ஆறு தலை வந்து விடுகிறது, நாலு கை வந்து விடுகிறது, நான் என்று சொன்ன உடன் செருக்கு வந்து விடுகிறது, ஆகவே நானும் இல்லை, இறைவனும் இல்லை. Only that exist.

வள்ளுவரும் அது இது என்று தானே குறிபிடுகிறார்.

“ஐயப்படாது அகத்தது உணர்வானை தெய்வத்தோடு ஒப்பக் கொளல்”.

“ஒரத்து உள்ளம் உள் அது உணரின் ஒருதலையாய் பெயர்த்துள்ள வேண்டாப் பிறப்பு”

வள்ளுவர் எல்லா இடத்திலும் இந்த ரகசியத்திலும் ரகசியம் அது, இது என்று தான் குறிப்பிடுகிறார். “THAT” என்ற ஆங்கில சொல்லும் எதை நாம் அறியாமல் இருக்கிறோமோ இந்த இராசியத்தைத் தான் குறிக்கறது.

“HIM” என்ற சொல்லும் அந்த “THAT” என்பதைத் தான் குறிக்கிறது.

“I” என்ற சொல்லும் அதே சொல்லைத் தான் குறிக்கிறது.

ஆக, இந்தக் கேள்விக்கு பதில் இன்னொருவரிடம் கேட்டு புரிந்துகொள்ள முடியாது.

ஆனால், இதை உணர வேண்டும் என்று சீடர்களுக்கு குரு சொல்வது என்னவென்றால்....

“அப்பா... நீ உன் மனதை தாழ்வாக வைத்துக்கொண்டு என்னிடம் அது இல்லை, இது இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டு ஏதேதோ கற்பனை செய்து கொண்டு, வேதனைப் பட்டு சங்கடப்பட்டு பாரம் சுமக்கின்றாய், நீ உன்னை உணர்கிறபோது இதெல்லாம் தானாய் போய்விடும்.” என்கிறாகள்.

நீ உன்னை உணர்கிறபோது அனைத்து பாரங்களும் அந்த ஷணமே இறக்கி வைக்கப்படும்.

அப்படி உணர்ந்துவிட்ட பிறகு எப்போது மகிழ்ச்சி தானே......!!!

இதைவிட எளிமையான விளக்கம் வேறு என்ன இருக்க முடியும்.......???

சிந்தனை செய் மனமே......!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.