Friday, 1 April 2016

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு என்ற விஷயத்தை புரிந்து கொண்டால் , உன்னை நீ உணர்ந்து சந்தோஷமாக வாழ முடியும் - பகிர்வு

எதிர்பார்ப்பு என்பது கடந்த காலத்தின் மூலம் உன் மனம் கண்ட சுகத்தை கொண்டு அதுவே அடுத்த நிமிடம், அடுத்த நாள் , அடுத்த வாரம் மற்றும் வருடம் வரை  - இந்த நபர் ,இந்த சூழ்நிலை இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை தான் என்பதாகும்,

இந்த எதிர்பார்ப்பு அற்ற நிலை எப்பொழுது வரும் ஒவ்வொரு நிமிடமும் புதிது, ஒவ்வொரு சூழ்நிலையும் புதிது, என்ற தன்மையில் உன் இயல்பான மனவிரிவில் வரும் தன்மை ஆகும்.

நான் ஆச்சர்யப்பட்டு மெய் சிலிர்த்து போன உதாரணம் இங்கே பதிவு செய்கிறேன்,

ஒரு மாதம் முன்பு ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் ஆன்மீகவாதியை நான் பார்த்தேன் அவரிடம் சிலவற்றை நான் பகிர்ந்ததேன்

அதில் ஒன்றை நான் இங்கு சொல்கிறேன்- அவர் மரங்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்தேன் அது போல இன்று நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்றார்,

அதற்கு பிறகு மரத்தை மரமாக பார்க்க வேண்டும் என்றார் ,அதாவது எல்லோரும் எந்த மரம் எல்லாம் வைக்க வேண்டாம் என்று சொன்னர்க்ளோ, அதை தான் நான் வைத்துள்ளேன்- இந்த மரங்கள் எதுவும் காய் கனி கொடுக்காத மரங்கள்  , ஒரு காய் கனி மரங்களை நட்டால் நீ அதை மரமாக பார்க்காமல் அதனிடம் வரும் காய் கனி இவைகளை மட்டுமே தான் எதிர்பார்த்து அதை பார்ப்பாய், ஆனால் அதில் இருக்கும் முழுமையான அன்பை உன்னால் உணர முடியாது

அவரை மீறி கொய்யா மற்றும் சாப்போட்ட  மரங்களை அங்கு  வைத்தார்கள் அதிலிருந்து வரும் காய் கனியை காக்க குருவி மட்டும் தான் சாப்பிடுகிறது - மரத்திடம் நிழல் காய் கனி போன்ற ஆதாயம் கொண்டு வியாபாரத்
தன்மையில் எதிர்பார்த்து வளர்த்தினால் அதிலிருந்து வர கூடிய முழுமையான அன்பு உனக்கு தெரியாது உணறவும் முடியாது  என்பதை உணர்த்தும் பொழுது கண்களில் நீர் கசிந்தது,

ஆனால் நாம் ஒரு மரத்தை ,ஒரு நபர்களை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு முட்டாள் தனமான எதிர்பார்ப்பு கொண்டே அணுகும் பொழுது உண்மையான அன்பு என்ற தன்மையை உணர முடிவதில்லை எல்லாவற்றையும் எதிர்பார்த்து வியாபார நோக்கில் தான் பார்க்கின்றனர், 
பெரும்பாலும் கிட்டதிட்ட 99 சதவீதம் எதிர்பார்ப்பை கொண்டே தான் வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது, அதை குறைத்து வாழ்ந்தால் உன் வாழ்க்கையை பற்றிய உண்மையை நீ உணர முடியும்,

எதிர்பார்ப்பை குறைத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம் என தத்துவங்கள் மூலம் அறிந்த ஒன்று,

கொஞ்சம் தன்னை பற்றி சிந்திப்பவர்கள் எதிர்பார்ப்பின் தன்மையில் நடந்த அனுபவம் மூலம் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு,

எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று ஒரு தரப்பினர் சொல்வதையும், இன்னொரு தரப்பினர் எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என சொல்லிக் கொண்டிருப்பதையும் நீ அறிந்ததே!

முழுக்க முழுக்க உன்னை சுற்றி உள்ள அனைத்திலும் எதிர்பார்ப்பு என்ற ஒன்றை  சுமந்து  கொண்டே தான் மூட்டை கட்டி வாழ்கின்றாய், கேட்டால் எனக்கு எந்த வித எதிர்பார்ப்பு இல்லை என்று பெருமையாக சொல்லிக் கொள்வாய்,

பின்வருமாறு எதிர்பார்ப்புக்கு உதாரணம் கொண்டு பார்க்கலாம்

காலை எழுந்த உடனே இருந்து இரவு வரை நீ எதிர்பார்க்கும் தன்மைகள் ஒரு உதாரண பார்வை

நீ வீட்டை விட்டு வெளியே வந்தால் உன்னை வணங்கி உனக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும்,

நீ உன் வீட்டில் வைக்கும் விசேஷமாக இருந்தால் அங்கு வருபவர் மிக அழகாக neat ஆக வர வேண்டும், உன்னை மீறி அவர்கள் எந்த அளவிலும் இருந்து விட கூடாது பின்பு நீ செல்லும் இடங்களிலும் விசேஷமாக இருந்தால் அங்கு அதே எதிர்பார்ப்பு நீ பிறரிடம்  வைத்துள்ளாய்,

ஆன்மீக தளங்களில் கூட உன்னை தூக்கி வைத்து புகழ வேண்டும் உன்னை வணங்க வேண்டும்,

உன்னுடன் உனக்கு கூட வரும் நபர்கள் கணவன் மனைவி குழந்தை என அனைவரும் உனக்கு தகுந்த மாறி வர வேண்டும்,

நீ வேலை செய்யும் இடங்களில் உன்னுடன் வேலை செய்பவர்கள் கை கால் அசைவுகள் கூட தனக்கு தகுந்த மாறி அசைவு இல்லை என்றால் அது மரியாதை குறைவு என ஏதோ விதத்தில் அவர்களை அதட்டும் விதம்

உன் குழந்தைகள் நீ வீட்டுக்கு உள்ளே நுழையும் பொழுது உனக்கு அப்பா அல்லது அம்மா என்ற பயம் இருக்க வேண்டும்,

உனக்கு பிடித்த மாறியான உணவுகள் மட்டுமே செய்ய வேண்டும்,

நீ ரோட்டில் பயணம் செய்யும் பொழுது உனக்கு தக்கவாறு முன்னே அல்லது பின்னே செல்பவர்கள்  ஒதுங்கி சென்று விட வேண்டும்

ஊருக்குள்ளே உனக்கென பெரிய மனுசன் என்ற மரியாதையைக் கொடுக்க வேண்டும், நீ வந்தால் எழுந்து நின்று குலக் கும்பிடு போட வேண்டும்,

ஒரு விசேஷத்துக்கு செல்ல வேண்டும் என்றால் உன் ஆடை முதல் வாகனம் வரை உன்னை நீயே தயார் படுத்தி கொள்வது,

உன்னை சுற்றி உள்ள இடத்தில்  சமுக சேவை செய்கிறேன் என்ற பெயரில்- உன் பெயரை நிலை நிறுத்த செய்யும் தன்மைகள்,

நாளைக்கு உயிர் வாழ்வோமா இல்லையா என்று தெரியாத நிலையில்  நாலு தலை முறைக்கு சொத்து சேற்று விட வேண்டும் என்ற வேகமான ஓட்டம்,

உன் வீட்டில் உள்ள பொருட்கள் இப்படி தான் இருந்தாக வேண்டும் ,

உன்னிடம் பேசுபவர்கள் இப்படி தான் பேச வேண்டும்,

உன் குழந்தை உன்னுடைய ஆசையின் படி படிக்க வேண்டும் , marK வாங்க வேண்டும் , sports ல first வர வேண்டும் ,

பக்கத்து வீடு மாறி நம் வீடு கார் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு

நீ ஆன்மீகத்தில் உணர்ந்தது போல உன்னை சுற்றி உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருத்து தீனி போடுவது,

நேற்று சாப்பிட்ட உணவை போல இப்ப சாப்பிட்ட உணவு இல்லை,

நீ போடும் பதிவுகளுக்கு மற்றவர் கை தட்ட வேண்டும் ,உணர வேண்டும் , வாதம் செய்ய கூடாது என்ற தன்மை,

இயற்கை மாற்றத்தில் வரும் மழை , வெய்யில் ,குளிர் என எதுவாக இருந்தாலும் உனக்கு தக்கவாறு மட்டும் இருக்க வேண்டும்.

என உன் எதிர்பார்ப்புகளை சொல்லி 100 மாடி கட்டிடம் போல அடிக்கி கொண்டே போகலாம்,

இந்த எதிர்பார்ப்பில்  கொஞ்சம்  குறைந்தால் உன்னால் கொஞ்சம் கூட தாங்கி கொள்ளாத நிலை குலைவு உன் உள்ளே  ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து கொண்டு இனம் புரியாமல் உன் கோபத்தை வெளிபடுத்துகிறாய்,

ஆன்மீகத்தில் முழுமையாக புரிந்து கொள்ளாதவன் அதை polish ஆக மறைத்து மிக தெளிவாக இருப்பது போல காட்டி கொண்டு உள்ளே ஒரு பெரிய போராட்டத்தை ஏற்படுத்தி கொள்கிறான்,

அடிப்படை தேவைக்கு உண்டான  எதிர்பார்ப்பு அதாவது பசித்தால் சோறு, உடை ,வீடு, வாகனம் என அத்தியாய தேவைக்கு உண்டான எதிர்பார்ப்பு என்பது இயல்பு தான்,

இதை தாண்டி முட்டாள் தனமான எதிர்பார்ப்புகளை கொண்டு வாழும் பொழுது வாழ்வு என்பது சலிப்பை தான் கொடுக்கும் அங்கு நிறைவு இருக்கவே இருக்காது,

உன்னை நீ ஆழமாக கவனிக்க கவனிக்க உனது முட்டாள் தனமான  எதிர்பார்ப்புகளை நீ கண்டு கொள்ள முடியும் ,

பின்பு அதில் வரும் சலிப்பை கடந்து செல்வதை உணர முடியும்

இந்த எதிர்பார்ப்பு உனக்கு உள்ளே குறைய குறைய உன் உள் உணர்வில் ஒவ்வொன்றும் புதிது புதிதாக முழுமையான அன்பில் காட்சி அளிப்பதும் , அன்பின் அலைகளை ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு உயிரிலும் வெளிப்படடுவதை, பிரபஞ்சத்தின் அன்பு  அலைகள்  உன் மேல் உறசுவதை உணர முடியும்,

இந்த உணர்வு மலர மலர உன்னை நீ எப்பொழுதுமே சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும்,

எதிர்பார்ப்பு குறைய குறைய அன்பு என்ற சந்தோஷம் மலரும்

அதை நீடித்த நிலையான தன்மையில் இருக்க ஆழமான தியானம் தான் உனக்கு மிக பெரிய துணை!

தியானம் செய் சந்தோஷமாக உன்னை உணர்ந்து வாழு!

வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு மறைந்து போ !

நன்றி
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.