Wednesday 20 April 2016

எப்படி நாம் சூன்ய நிலையை அடைவது?

எப்படி நாம் சூன்ய நிலையை அடைவது?

தியானம் மூலமாகத்தான் அடைய முடியும்.

வேறு வழி இல்லை.

உங்களையே நீங்கள் பாா்க்கமுடியாத
அளவுக்கு, அந்த கடைசி "நான்" என்பதை விட்டால் மட்டுமே, அதை அடைய முடியும்.

ஏனெனில், அந்த சிறிய "நான்" என்பது கூட அதை அடைய முடியாத அளவுக்குத்
தடை செய்து விடும்.

அதுவும் மறைந்த பிறகு வெற்றுத்தாள் போல். மேகமற்ற ஆகாயம் போல், முதலும் முடிவும் தொியாத அளவுக்கு ஆழமாக ஒரே நீல நிறமாக இருப்பீர்கள்.

இதைதான் புத்தா் "அனாதா" என்று அழைத்தாா்.

இதுதான் உண்மையான சூன்ய நிலை.
இதுதான் உள் மையம்.

புத்தா், " நீங்கள் நடவுங்கள், அப்போது நடப்பவா் யாரும் இல்லை, சாப்பிடுங்கள், சாப்பிடுபவர் என்று அங்கு யாரும் இல்லை.
நீங்கள் பிறந்திருக்கிறீா்கள், ஆனால் பிறக்ககூடியவா் என்று யாரும் இல்லை.
நீங்கள் வியாதி அடையலாம்
உங்களுக்கு வயதாகலாம், ஆனால் வியாதியடைந்தவா் என்றும் வயதானவர் என்றும் அங்கு யாரும் இல்லை.

நீங்கள் இறக்கலாம், ஆனால் இறப்பவா்
என்று யாரும் இல்லை.

இதைதான் பேரின்ப வாழ்வு என்பது...
நீங்கள் பிறக்கவே இல்லை என்றால்
எப்படி நீங்கள் இறக்க முடியும்?

நீங்கள் இல்லையென்றால் எப்படி நீங்கள் வியாதியாகவோ ஆரோக்கியமாகவோ இருக்க முடியும்"
என்கிறாா்.

இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் சாட்சியாக இருப்பீர்கள்.

-ஓஷோ-

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.