ஹார்ஸ்லி ஹில்ஸ்
ஹார்ஸ்லி ஹில்ஸ், ஆந்திர மாநிலத்தில் கர்நாடக எல்லை அருகே இருக்கும் இந்த இடத்தை 'ஆந்திராவின் ஊட்டி’ என்றும் அழைக்கிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 1,265 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஹார்ஸ்லி ஹில்ஸ், சென்னை, பெங்களூரு மற்றும் திருப்பதி நகரங்களில் இருந்து எளிதாகப் பயணம் செய்யக்கூடிய தூரத்தில் இருக்கிறது. பெரிய திட்டமிடல் ஏதும் இல்லாமல், வார இறுதிகளில் சென்னையில் இருந்து செல்வதற்குச் சிறந்தது. இந்த இடத்தை அடைவதற்கான சாலைகளும், சூழலும் மிக ரம்மியமாக இருக்கும். இந்தியாவில் 'ஞீஷீக்ஷீதீவீஸீ
ரீ’ (பிளாஸ்டிங் பந்தில் நம்மை உள்ளே விட்டு உருட்டிவிடுவார்களே.. அதுதான்) விளையாட்டு உண்டு. ஆனால், முன்பதிவு கட்டாயம். பூக்களும், சந்தன மரங்களும், யூக்கலிப்டஸ் மரத்தின் வாசமும், மிதக்கும் மேகங்களும் உங்கள் மனதில் இருக்கும் அத்தனை சோர்வையும் நீக்கிவிடும். ஹார்ஸ்லி ஹில்ஸின் தட்பவெப்ப சூழ்நிலைகள் 5 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஹார்ஸ்லி ஹில்ஸில் அதிக நாட்கள் தங்கி சுற்றிப் பார்ப்பதற்கு ஏதும் இல்லை என்றாலும், ஒரு க்விக் டிரிப் அடிக்க சிறந்த இடம்.
என்ன பார்க்கலாம்:
🔺ஹார்ஸ்லி ஹில்ஸில் இருந்து)
🔺கலிபண்டா 0.3 கி.மீ
🔺கல்யாணி மரம் 0.4 கி.மீ
🔺திம்மம்மா ஆலமரம் (உலகின் மிகப் பெரிய
ஆலமரம்) 75 கி.மீ
🔺பசுமைப் பூங்கா 0.4 கி.மீ
🔺கௌண்டிண்ய வனவிலங்கு சரணாலயம்
133 கி.மீ
எப்படி போகலாம்:
ஹார்ஸ்லி ஹில்ஸில் இருந்து)
கலிபண்டா 0.3 கி.மீ
கல்யாணி மரம் 0.4 கி.மீ
திம்மம்மா ஆலமரம் (உலகின் மிகப் பெரிய ஆலமரம்) 75 கி.மீ
பசுமைப் பூங்கா 0.4 கி.மீ
கௌண்டிண்ய வனவிலங்கு சரணாலயம் 133 கி.மீ
எங்கே தங்கலாம்:
ஹார்ஸ்லி ஹில்ஸில் ஆந்திரப் பிரதேச அரசு சுற்றுலாத் துறை, ஒரு ரிஸார்ட்டை வைத்திருக்கிறது. இங்கு தங்குவதற்கு அவர்களுடைய வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். உணவும் நன்றாக இருக்கிறது. ஹார்ஸ்லி ஹில்ஸில் 700 ரூபாயில் இருந்து 7,000 ரூபாய் வரை தங்குவதற்கு இடங்கள் உள்ளன. வார இறுதி நாட்களில் இந்த வாடகை விலை ஏறிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். எங்கு தங்குவதாக இருந்தாலும், முன்பதிவு செய்துவிட்டு பின்னர் பயணத்தைத் துவங்குவது நலம்.
Sunday, 17 April 2016
ஹார்ஸ்லி ஹில்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.