Wednesday, 27 April 2016

வாழ தெரிந்தால் ...வாழலாம்

அழுகை ..
கண்ணீர்..
.......
கேள்வி
..
இதயத்தில் எவன்டா
வலியை வைத்தது
வலிக்குதடா
....
கோபமாக கேட்கபட்ட
ஞானமான கேள்வி
...
இந்த
உலகின் ஆச்சரியமான கேள்வி
ஆயிரம் ஆயிரம்
அதில்
கடவுள் இருக்கிறாரா ???
....
கண்ணுக்கு தெரியும் பொருளை
கண்ணால் காணும் உருவை
மட்டுமே
சுற்றி சுற்றி நம்பும் அறிவியல்
வலி
எப்படிபட்டது
எங்கே இருக்கிறது
எங்கே இருந்து வந்தது
எங்கோ வலிக்கும் வலிக்கு
கண்ணில் இருந்து நீர்
கட்டுப்பாடு அற்று ஓடுகிறதே
தண்ணீர் தெரியும்
கண்நீர் எங்கே இருந்து வந்தது
....
இவைஎல்லாம்
அனுதினமும் உணரும் மனம்
கடவுள் பற்றி கேள்வியும் கேட்குமே
....
கண்நீருக்கு
மூன்று மாய பைகள்
ஒன்று
யதார்த்தம்
அதாவது
பூலோகம் தன்மை
இரண்டு
தேவலோகத்து தன்மை
மூன்று
கர்மலோகத்து தன்மை
....
மூன்றுமே
சூட்சும சரீரத்தில் உள்ளவை
காண முடியாது
...
சிறு நீரு பை
ஸ்தூல உடலில் உள்ளவை
இதை காண முடியும்
...
வெங்காயம்
தூசி
காற்று
இதனால் வரும்
கண்நீர்
இவை அனைத்தும்
பூலோக தன்மை
....
ஆனந்தம்
அன்பு
கருணை
ஈகை
சத் தன்மை
இதனால் வரும்
கண்நீர்
தேவலோகத்து தன்மை
...
வலி
துன்பம்
கொடுமை
கடுமை
வேதனை
பொறாமை
விவகாரம்
எல்லை அற்ற
மாய பற்று
மற்றும்
...
அன்பை கடனாக கொடுத்து விட்டு
அநியாய வட்டியுடன்
அந்த அன்பை
திரும்ப கேட்பதால் வரும் வலி
....
அன்பை யாருமே
வட்டிக்கு கூட தரமாட்ராங்களே
என்ற அன்பு அழுகை
....
முக்கியமாக
கர்மவினை காரணமாக வரும்
காணபொறுக்காகாத வலி
...etc...
...
  இவை எல்லாம்
கர்மோலகத்து நீர்
.....
சிவம்
உயிருக்கு கொடுத்த வரம்
உடல்
இப்பிறவி
....
மன்னனும் அவனே
மந்திரியும் அவனே
மக்களும் அவனே
ஈசனும் அவனே
அசுரனும் அவனே
ஆனந்தமும் அவனே
அழுகையும் அவனே
....
அத்தனை அதிகாரமும்
வழங்கபட்டுவுள்ளது
...
உலகின்
முதல் பணக்காரனாக ஆகலாம்
பரதேசிஆகவும் ஆகலாம்
...
சிரித்து கொண்டும் வாழலாம்
அழுதுகொண்டும் வாழலாம்
பொறாமையால்
அழிந்து எரிந்து கொண்டும் வாழலாம்
அன்பால்
தீப ஒளியுடனும் வாழலாம்
....
அனைத்தும்
ஒரு பிறவி எடுத்தவன் கையில்
...
வாழ்த்துக்களுடன்
வாழ்ந்து விட்டு
கடமை முடித்துவிட்டு வா
என்று
பிறவி கொடுத்த
பிறைசூடியவனை
இறைவனை
கேள்வி கேட்க கூட
அவசியம் இல்லை
...
வாழ்வை
வாழ தெரிந்தால்
...வாழலாம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.