"கோடந்தூர் - சுற்றுலா தலம்"
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை வழியாக மூணார் செல்லும் வழியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சம் அற்புத இடம் தான் கோடந்தூர். இன்று காலை 6 மணிக்கு கோடந்தூர் சென்றடைந்தோம் . காட்டுப்பாதையில் தான் பயணம் வழியில் யானை நடந்துச் சென்றதற்கான தடம் . இடையில் இரண்டு மான் குட்டிகள் சிறு துள்ளலுடன் எங்கள் வாகனத்தை அனாயசமாக கடந்துச் சென்றது . ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் வாகனம் செல்ல அனுமதி இல்லாத்தால் நடந்துச் சென்றோம். உள்ளே செல்ல செல்ல அருவியின் ஒசை ... ஆவல் அதிகமாக இன்னும் வேகமாக எட்டு வைத்தோம். ஆச்சர்யம் ... மூலிகை மணத்துடன் சல சல என மிக சுத்தமாக ஆர்ப்பரிக்கும் அருவி.. சில் என்று... 2 மணி நேரம் ஆனந்த குளியல். அருவியின் அருகிலேயே சுற்றுப் பகுதியினை சேர்ந்த பழங்குடி மக்களின் உணவகம்.. இதில் ஆச்சர்யம் அவர்கள் சட்னியை பாறைகளில் இயற்கையாகவே அமைந்த அம்மிகளில் அரைத்தது தான் ..அத்தனை சுவை. அடுத்து பழங்குடி மக்களின் அந்த வழிப்பாடில் 2 மணி நேரம் நானும் கலந்துக் கொண்டேன். மிகப் பெரிய பாறையில் சுற்றிலும் வேல் ,சூலம் என நான்கு பகுதிகளிலும் சூழ நடுவில் "கட்டளை அம்மன்" கம்பீரமாய். வீர்றிருக்கிறாள் அங்கு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. அவர்கள் அத்துனை அர்ப்பணிப்புடன் வழிப்பாடு நடத்தியது என்னை சிலிர்க்க வைத்தது...
கட்டளை அம்மன் இன்னும் என்னை விட்டு அகலவில்லை
கிட்டதட்ட 6 மணி நேரத்திற்க்கு பின் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தேன். வாய்ப்பிருக்கும் தோழமைகள் சென்று வாருங்களேன் . மனம் இலகுவாகும்
Sunday, 17 April 2016
கோடந்தூர் - சுற்றுலா தலம்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.