Saturday, 23 April 2016

அன்பான குரு அவர்களே,

Excellent truth given by osho 👇🏻

அன்பான குரு அவர்களே,

மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களின் மற்றும் அரசியல்வாதிகளின் முட்டாள்தனங்களை மிகவும் தீவிரமாக நீங்கள் தாக்கிப் பேசும் பொழுது, நான் என் மனதுக்குள் உங்களைப் பாராட்டுகிறேன். ஆனால், அதே சமயம் நீங்கள் பகையைத் தானே தேடிக்கொள்கிறீர்ஙள். அது உங்களுக்குத் தீங்கை விளைவிக்கும்.அதிலிருந்து உங்களைப் பாதுகாக்க விரும்புகிறேன். இதற்கு உங்களுடைய பதில் என்ன? அல்லது உங்களது சீடர்கள் இப்படியே தடுமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்த வேண்டுமா?

மனிஷா, என்னைப் பொருத்தவரையில், நான் எனது வீட்டை அடைந்து விட்டேன்.

எங்கெங்கே பொய்மை நிலவுகிறதோ, எங்கெங்கே பொய்யான ஆறுதல் சொல்லப்படுகிறதோ, அங்கே சென்று வரும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அதை எதிர்ப்பது என்பது எனக்கு தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

அவர்கள் என் உடலுக்கு வேண்டுமானால் தீங்கு விளைவிக்கலாம். ஆனால், நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், அது அவ்வளவு சுலபமல்ல.அதன் காரணத்தைப் பிறகு சொல்கிறேன்.

எனக்கு எதிராகச் சட்ட விரோதமாக என் மீது குற்றம் எதையும் சாட்ட முடியாத நிலையில் அமெரிக்காவை விட்டு என்னை வெளியேற்றிய போது, அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் எட்மீஸ் (Ed Meese)  ஒரு பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் கூறினார். "ஆமாம் அவர் மீது குற்றம் சுமத்த எந்த ஆதாரமும் இல்லை.ஆனால் நமது தேசத்தில் அவரை அனுமதிக்க முடியாது. அவர் இளம் கிருஸ்துவர்களைக் கவர்ந்திழுக்கிறார்." என்றார்.

எட்மீஸ் மேலும் "அவரை நாங்கள் ஜெயிலில் போட முடியாது.அதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் கிடையாது. அதைப்போல அவரை நாங்கள் கொல்லவும் முடியாது.அப்படிக் கொன்றால், அதன் பின் விளைவு அவரை ஒரு மத ஸ்தாபகராக்கி விடும்." என்றார்.

இந்த பயம்தான், என்னுடைய பாதுகாப்பு.!

ஆகவே, நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.ஜீஸஸைக் கொல்ல முயற்சி செய்ததால், என்ன விளைவு ஏற்பட்டது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அந்த ஆபத்தான நிலையை மறுபடியும் அவர்கள் ஏற்படுத்த மாட்டார்கள்.

ஆகவே, மனிஷா, ஒன்றும் கவலைப் படாதீர்கள்.அவர்களது பயத்தில், கண்ணுக்குத் தெரியாத வகையில், எனக்கு ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கிறது.

சிங்கம் கர்ஜிப்பதைப் போல, நான் உண்மையை வெளியிடும் பொழுது, நான் அவர்களிடம் ஒருவித பயத்தை உண்டு பன்னுகிறேன்.

அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு பயப்படுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் எனக்கு தொந்தரவு கொடுப்பது குறைவாக இருக்கும்.

உங்களின் பிரச்சினை எனக்கு மிக நன்றாகவே தெரியும். எனக்காக, நீங்கள் ஒரு தடுமாற்றத்தில் இருக்கிறீர்கள்.

அது உண்மைதான்.

சாக்ரட்டீஸுடன் வாழ்ந்தவர்களும் அப்படி ஒரு இறுக்க நிலையில்தான் இருந்தார்கள். அது அவர்களை சுத்தப்படுத்தியது.

அதைப்போல ஜீசஸுடன் வாழ்ந்தவர்களுக்கும், அப்படி ஒரு ஆன்மிக மாற்றம் பின்னால் ஏற்பட்டது.

அதைப்போல, எனக்கு ஏதும் நிகழ்ந்தால், அதைவிட அதிகமாக உங்களிடம் அப்போதே ஏற்படும்.

நான் இருக்கும் வரை, அந்த மாற்றத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கலாம்.
அதற்கு ஒன்றும் அவசரம் இல்லை என்று.

ஆனால், எனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதுவே ஒரு அவசர மாற்றுத்திற்கு வழிவகுத்து விடும்.

--ஓஷோ--

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.