Tuesday, 26 April 2016

ஆதிசங்கரர் ். கேள்வி -- பதில்

உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர்.
கேள்வி -- பதில்
பாணியில் இவர் அருளிய
" பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா "
என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.....

✒எது இதமானது?

தர்மம்.

✒நஞ்சு எது?

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

✒மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?

பற்றுதல்.

✒கள்வர்கள் யார்?

புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

✒எதிரி யார்?

சோம்பல்.

✒எல்லோரும் பயப்படுவது எதற்கு?

இறப்புக்கு.

✒குருடனை விட குருடன் யார்?

ஆசைகள்
உள்ளவன்.

✒சூரன் யார்?

கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

✒மதிப்புக்கு மூலம் எது ?

எதையும் யாரிடமும் கேட்காமல்
இருப்பது.

✒எது துக்கம்?

மன நிறைவு இல்லாமல் இருப்பது.

✒உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம்?

குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

✒தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை?

இளமை, செல்வம், ஆயுள் ஆகியன.

✒சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?

நல்லவர்கள்.

✒எது சுகமானது?

அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

✒எது இன்பம் தரும்?

நல்ல மனதுடையோர்களின்சிநேகிதம்.

✒எது மரணத்துக்கு இணையானது?

அசட்டுத்தனம்.

✒விலை மதிப்பற்றதென எதைக்
குறிப்பிடலாம்?

காலமறிந்து செய்யும் உதவி.

✒இறக்கும் வரை உறுத்துவது எது?

ரகசியமாகச் செய்த பாவம்.

✒எவரை நல்வழிப்படுத்துவது கடினம்?

துஷ்டர்கள். எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள். சோகத்திலேயே சுழல்பவர்கள். நன்றி கெட்டவர்கள்
ஆகியோர்!

✒சாது என்பவர் யார்?

ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

✒உலகத்தை யாரால் வெல்ல முடியும்?

✨சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

✒யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

✨எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

✒செவிடன் யார்?

✨ நல்லதைக்
கேட்காதவன்.

✒ஊமை யார்?

✨சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

✒நண்பன் யார்?

✨பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

✒யாரை விபத்துகள் அணுகாது?

✨ மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.