Friday, 22 April 2016

ஆன்மீகக் கல்வி என்பது

ஆன்மீகக் கல்வி என்பது மற்ற கல்வியையோ, அல்லது நல்லொழுக்கத்தையோ போன்று அல்லாமல், முற்றிலும் வேறு கோணத்தில் கற்றலாகும்.

மற்ற வகைக் கல்வியில், நீ அப்படியே தான் இருப்பாய்.

பலவிதச் செய்திகளை உனக்குள்ளே சேமித்துக் கொண்டிருப்பாய்.

நீ பூகோளத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்கான ஆசிரியரிடம் சென்று உன்னால் கற்றுக்கொள்ள முடியும்.

உன் பூகோள அறிவு விருத்தி அடைந்து கொண்டே இருக்கும்.

ஆனால், நீ அப்படியேதான் இருப்பாய்.

ஆனால், உன்னுடைய இருத்தல், இருத்தலின் தன்மை, உன்னுடைய நிலைப்பாடு, எந்த மாறுதலும் அடையாமல் அப்படியேதான் இருக்கும்.

நீ ஆன்மிகம் அல்லது உண்மையை கற்றுக் கொள்ள முற்படுவது வித்தியாசமானது.

அது செய்திகளின் தேக்கமல்ல.

அது உன்னுடைய அறிவை விருத்தி செய்வதல்ல.

அது உன்னுடைய இருத்தலின் வளர்ச்சி.

நீ அதிகமாகத் தெரிந்து கொள்வதல்ல.

ஆனால், நீயே அதிகமாகிறாய்.

அது உன்னுடைய நினைவாற்றலை கூர்மைப்படுத்தும் வேலையைச் செய்யாது.

உன் இருத்தல், உன் முழுமையான இருத்தல், மேலும், அமைதி அடைந்து பரமசுகம் உண்டாக்கக்கூடியது.

மதம் என்பது இருத்தலைக் கற்றுக்கொள்வது.மற்ற கல்வி அனைத்தும், வெறுமனே நினைவாற்றலுக்கும் பயிற்சி அளிப்பவையே.

மற்ற அப்பியாசங்கள் அனைத்தும் உன் அறிவை வளர்க்கும்.ஆனால், மதம் உன்னை அறிய வைக்கும்.ஆனால், அறிவைத் தராது.

அறிவது, பார்க்கும் வல்லமையைப் பெறுவது, இவற்றிற்கு அபரிதமான சக்தி அவசியம்.

இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

--ஓஷோ--

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.