Wednesday 27 April 2016

கடந்து செல்.

முழுமையாக அனுபவித்து உணர்ந்து கடந்து செல் - பகிர்வு

உனக்கு உள்ளே அடிக்கடி தோன்றும் ஒவ்வொரு விஷயங்களும் உன்னை யார் என்று உனக்கே காண்பிக்க கூடிய அற்புதமான விஷயம்,

ஆனால் அந்த விஷயம் திரும்ப திரும்ப வருமேயானால் அதனை ஆழ்ந்து கவனித்து உனது உள் நிலைக்கு பொருத்தமான ஒன்றாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,

அப்படி பொருந்தாத ஒன்றாக இருக்கும் எனில்,

அந்த பொருந்தாத ஒன்று திரும்பவும் எழுகின்றன என்றால் அந்த விஷயத்தையோ, பழக்கத்தையோ,
முழுமையாக உணரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

உதாரணம்

கோபம்
காமம்
சிகரெட் பிடிப்பது
தண்ணி அடிப்பது
இனிப்புக்கு அடிமை
பொறாமை தனம்

என சொல்லிக் கொண்டே செல்லலாம்,

என எந்த ஒன்றிலும் உனக்கு உள்ளே அதை முழுமையாக அனுபவித்து வந்தால் ஒழிய நீ அதில் இருந்து அதை கடக்க முடியும்

இல்லை எனில் அது உனக்கு உள்ளே இருந்து திரும்ப திரும்ப ஒழித்து கொண்டே இருக்கும் உன்னை மாற்றுவதுக்காக!

ஏனெனில் நீ சந்தோஷத்தை தேட இயற்கையிடம் உன்னை அறியாமல் வேண்டுகிறாய்,

இயற்கை உன்னை மாற்ற திரும்ப திரும்ப இது தான் உனக்கு தடை ஒரே விஷயத்தை காட்டுகிறது,

எந்த குணத்தை, எந்த அடிமை செயலில் நீ சிக்கித் தவித்து கொண்டிருக்கிறாயோ,

அந்த பழக்கம்  , அந்த குணத்தை எந்த நொடியில் 100% முழுமையாக உணர்ந்து கொள்கிறாயோ- அந்த நொடியில் நீ முழுமையாக அதை கடந்து வர முடியும்.

உனக்கு உள்ளே நீ நிலை குழைந்து எங்கெல்லாம் சிக்கித் தவித்து கொண்டு இருக்கிறாயோ,

அதை முழு விழிப்புணர்வு கொண்டு கடந்து செல்லும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திலும் நிலையான ஒரு உணர்வை பெரும் போதெல்லாம், உனக்கு உள்ளே நீ ஆனந்தமாக கொண்டாட முடியும் 
எப்பொழுதும் நிலையான ஒரு உணர்வை நீ சுவைக்க சுவைக்க, ஒரு கட்டத்தில் நிலையான இயற்கையோடு நீ ஒரு நாள் இணையக் கூடிய தருணம் கட்டாயம் வரும்

அது இன்று வருமோ, நாளை வருமோ, எப்பொழுது வருமோ அது உனது உள் முயற்சியை பொருத்தது.

ஒவ்வொரு நொடியையும் முழுமையாக அனுபவித்து விட்டு கடந்து செல்.

வாழ்க்கை உனக்காகவே ஒவ்வொரு வினாடியும் காத்து கொண்டு இருக்கிறது.

தியானம் ஒன்று போதும் எல்லாவற்றையும் கடக்க !

நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.