வாழ்க்கையைப் பற்றிய புரிதல் -பகிர்வு
வாழ்கை(one birth) என்பது இயற்கையென்ற புத்தகத்தின் ஒரு பக்கத்தை படிப்பது போன்றதுவே.
இதுவே நமது அறிவின் பயணம்(Journey of Consciousness -Inner travel towards perfection) அகமுகப் பயணம்.
இயற்கையை முழுமையாக படித்து முடிக்கும் வரை இந்தப் பயணம் தொடரும். இதில் சிறப்பு என்னவென்றால் நாம் தற்போது எந்த பக்கத்தில் இருக்கிறோம் என்பது தான். மேலும் ஒரு பக்கம் புரியாமல் மீண்டும் மீண்டும் அதனை எத்தனை முறை படிக்கிறோம் என்பதுவும் தான்.
நம் வாழ்கையில் அமையும் ஒவ்வொரு சூழலிலும் இயற்கை கற்றுக் கொடுக்கும் படிப்பினைகளை நாம் கற்றுக் கொண்டோமேயானால் எளிதில் புத்தகத்தை படித்து முடிக்க இயலும். புரியவில்லையெனில் ஏற்கனவே படித்து முடித்த ஞானிகளின் உதவியை நாடுவது தவறில்லை.
ஆனாலும் அவர்களின் அனுபவங்களை குறிப்புகளாக வைத்துக் கொண்டு நாமே தான் நம் வாழ்கை என்னும் புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும்.
ஞானிகளின் கருத்துக்கள் நம் சிந்தனையைத் தூண்டுவதற்கேயன்றி அதோடு நின்று விடுவதற்கு அல்ல.
கடைசி வரை பிறரின் வாழ்க்கையையே பாரத்துக்கொண்டிருந்தோமானால், (அதாவது தன்னுணர்வோடு தன் சொந்த வாழ்கையை வாழாமல் பிறரைப் பின்பற்றுதல் - Just as a follower or devotee - இரண்டும் ஒன்றே நாம் நாமாக சிந்திக்கத் தொடங்காதவரை) பல முறை புத்தகத்தின் பல பக்கங்களை மீண்டும் மீண்டும் படிக்க நேரும்... அதாவது பல பிறவிகள் எடுக்க வேண்டும். இதனை உணராமல் போவோர்க்கு அவர்களின் இந்த வாழ்கையே கூட உதவாமல் போகலாம்.
நன்றி
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.