Saturday 23 April 2016

ஆணவம்

ஆணவத்தை இப்படியும் பார்க்கலாம், உனது உள் வளர்ச்சியை எப்படி வளர்க்கின்றது - பகிர்வு

ஆணவம் இருக்கும் இடங்களில்  எப்பொழுதும் திமிரின் உச்சத்தில் இருப்பான், சரியான கொழுப்பு, ராச்சஷக்காரன், இவன் நினைத்ததை செய்தே தீருவான், பிடிவாதம் கொண்டவன் என பல பெயரில் சொல்லிக்கொண்டு போகலாம்.

ஆணவம் வரும் இடங்களில் நீ  உன்னை பெரிய ஆளு என நிலை நிறுத்திக் கொள்ளும் தன்மை அதிகரிக்க செய்கிறது,

இது ஒருவகையில் ஏற்றுக்கூடிய ஒன்றாக இருந்தாலும்,

இன்னொரு வகையில் இது உன்னை வளபடுத்தும் சக்தியாக வளம் வருகின்றதும் உண்மை தான்,

இப்படி ஆணவ தன்மை இருக்கும் இடங்களில் நீ துணிந்து எதை செய்ய நினைக்கிறாயோ அதை யாரை பற்றியும் கவலை படாமல் அதை செய்து முடித்து விடுகிறாய்,

ஆனால் பம்பிக் கொண்டு செய்யலாமா, வேண்டாமா என ஆற்றில் ஒரு மனதையும்,  சேற்றில் ஒரு மனதையும் வைத்துக் கொண்டு, உள் ஒன்றும் புறம் ஒன்றும் நடிப்பது ஆணவம் இல்லை என கருதிக் கொண்டு சப்பை கட்டு கட்டுவதால், ஒரு பலனும் நடக்க போவதில்லை - உண்மையில் இவன் எந்த தெளிவையும் முழுமையாக உணர போவதில்லை

ஏனெனில் அவன் என்ன நினைப்பார் இவன் என்ன நினைப்பார் என தனக்கு கிடைக்கும் உண்மையான ஆன்மீக பயிற்சி முதல் பல்வேறு நல்ல செயல்கள் வரை தெளிவை வளர்ச்சியைக் கொடுக்கும் என தெரிந்தும், பிறருக்காக கோழையாக இருந்து கொண்டே வாழ்வை தொலைத்து கொள்கிறான்,

இரண்டு பக்கமும் வேடம் போட்டு கொள்கிறான், ஆனால் உண்மையில் எந்த வேடமும் வெளிப்பட்டு விடும் என உணருவது இல்லை!

ஆனால் ஆணவத் தன்மையில் ரண்டுல ஒன்னு ஒரு கை பாத்து  போடனும் என்று நினைப்பவன் முழுமையாக நினைத்ததை யாரை பற்றியும் கவலை படாமல் செய்து முடிப்பான்,

அந்த செயலின் முடிவில் அதில் வரும் சரி தவறுகளை அவன் முழுமையாக கட்டாயம் உணருவான்,

விளைவில் கிடைக்கும் அடி இடி மாறி விழுந்தால் அதில் அவன் முழுமையை உணர்ந்து அவன் அவனை செதுக்கி கொள்கிறான்.

இந்த ஆணவம் அவன் ஆன்மீகத்தில் நுழைய பாதையாகவும் அமைகின்றது, அங்கேயும் அவனுக்கு தவம் செய்யும் பொழுது  அத்தன்மை அதிகமாகிறது

அதுவும் அவனை முழுமையாக மாற்றுகின்றது, அவன் ஆழ்ந்து சென்று கொண்டே ஆணவத்தையும் கரைத்து கொள்கிறான்,

ஆனால் பொத்தி பொத்தி அமைதியாக காட்டி கொண்டு ஆன்மீகத்தில் இருந்து கொண்டு  சரியானவனாக காட்டிக் கொண்டு தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வரும் வரை போராடி ஒரு பதவியை பற்றி கொண்டு, அதன் மூலம் ஆணவத்தை வளர்த்தி கொண்டிருக்கும் தன்மையில் இருப்பவன் என்றுமே ஆன்மீகத்தை உணர மாட்டான், தன்னை சுற்றி உள்ளவனையும் வளர விட மாட்டான். அவனுக்கும் ஆணவ தீனியே போடுவான்.

எனவே ஆணவத்தை கொண்டு உறுதியாக ஒரு விஷயத்தை வெளிப்படையாக செய்யும் ஒரு நபர் எந்த செயலையும் முழுமையாக செய்து கொண்டு அதன் விளைவில் வரும் அடியில் முழுமையை உணர்கிறான்,

ஆனால் முடக்கத் தன்மையோடு நடித்து நுணுக்கமாக செயல்படும் ஒருவன் தன் ஆணவத்தையும் சுற்றி உள்ள கோழைகளின் ஆணவத்தையும் மிக நுணுக்கமாக வளர்த்துகிறான் - இதற்கு கிடைக்கும் அடி மெதுவாக இருந்தாலும் அதிரடியான அடியாக கூட இருக்கலாம், அது அவரவர் பாடு !

பொதுவாக உன்னில்  எழும் ஆணவத்தை முழு கவனத்துடன் ரசித்து பார் அதிலிருக்கும் அபரிவிதமான சக்தி பொங்கி எழும் தன்மையை புரிந்து கொள்ள முடியும் , அந்த உத்வேக சக்தியை விழிப்புணர்வு கொண்டு கவனி,

அது உனக்கு வெளியே அழுத்தமாக வெளியேறி செல்வதை உனக்கு உள்ளே திருப்பி பார், அதனுடைய தன்மை உன்னை புரட்டி போட்டு உனக்கு உள்ளே பல மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையை- நீ உணர்ந்து கொள்வாய்,

இந்த மாற்றம் என்பது உனது ஆணி வேர் வரை சென்று மாற்றும், நீ ஒரு புதுமையான மனிதனாக மலர்வதை உணர்வாய், அங்கு அன்பு ஊற்றெடுக்கும்.

ஒன்று மட்டும் செய்ய வேண்டும் அது தான் -

""""தியானம்"""""

ஆழமாக சிந்தித்து உணர்ந்தால், ஆணவத்தின் ஆச்சர்யத்தை புரிந்தால்  ஒரு வளர்ச்சியைக் கொடுக்கும் திறவுகோள் என்று - அது புரியாத போது அதுவே உனக்கு நீயே செய்யும் முடக்கம் அவ்வளவே !

நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.