Tuesday 12 April 2016

ஓஷோ டைனமிக் தியானம்

ஓஷோ டைனமிக் தியானம்
ஆற்றல் மிக்க "ஓஷோ டைனமிக் தியானம் " அன்றாட இறுக்கங்களுக்கும் பழைய அடைபட்டுள்ள உணர்ச்சிகளுக்கும்
ஒரு சிறந்த வெளியேற்று வழியாகவும் ஆற்றலை ஊக்குவிக்கும் வழியாகவும் இருக்கிறது.
ஓஷோ டைனமிக் தியானத்தில் ஐந்து படிநிலைகள் உள்ளன.முதல் மூன்று நிலைகளில் ஒவ்வொன்றையும் 10 நிமிடங்கள் செய்யவேண்டும்.
இறுதி இரண்டு நிலைகளில் ஒவ்வொன்றையும் 15 நிமிடங்கள்
செய்ய வேண்டும்.
1.தாறுமாறாக மூக்கின் வழியாக மூச்சு விடவும்.மூச்சுவ
ிடும்போது வெளியேற்றப்படும் மூச்சின் மேல் கூர்ந்த கவனம் இருக்கட்டும்.
2.வெளியே கொட்டிவிடவேண்டிய அத்தனையையும் சத்தத்துடன் வெளியே தூக்கி எறியுங்கள்.
3.கைகளை உயர்த்திய வண்ணம் "ஹூ" என்று சப்தம் செய்தபடி மேலும் கீழுமாக குதிக்க வேண்டும்; கீழே காலின் பாதங்கள் தரையில் தட்டையாக பதியட்டும்.
4.அப்படியே நின்றுவிடுங்கள்.எந்த நிலையில் அசையும்போது அக்கணம் இருந்தீர்களோ அதே நிலையில் உடலின் பாகங்கள் அப்படியே கல்போல் சமைந்துவிட்டபடி நில்லுங்கள்.உங்
களிடம் ஏற்படும் அத்தனையையும் சாட்சிபோல் இருந்து கவனித்தபடி இருங்கள்.
5.நடனமாடிக்கொண்டாடுங்கள்.
முழுமைக்கு நன்றியைத் தெரிவித்தவாறு நடணமாடுங்கள்.
நாள் முழுவதும் இந்த மகிழ்ச்சி உங்களுடன் இருக்கும் .
--- ஓஷோ ---

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.