Tuesday, 12 April 2016

ஆனந்தம்

பேராசிரியர் ஒருவர் ஜென் ஞானியிடம் கேட்டார்,
''பல மணி நேரம் உங்களிடம் பேசி விட்டுச் சென்றாலும்,
சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றாலும் என் மனம் அமைதியாகி விடுகிறது.
ஆனால்,வீட்டிற்குப் போனதும் மீண்டு துக்கம் என்னைத் தொற்றிக் கொள்கிறதே,ஏன்?
அதே சமயம் நீங்கள் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறீர்களே,அது எப்படி?
''சிரித்தபடி ஜென் ஞானி சொன்னார்,''நான் உங்களுடன் என்னுடைய ஆனந்தத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் எப்போதும் என்னோடு உங்கள் துக்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறீர்கள்.அதுதான் காரணம்.''

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.