Saturday, 30 April 2016

இருபத்திஏழு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் ”

“ இருபத்திஏழு நட்சத்திரபடி பெண்களின்  குணங்கள் ”

1. அசுவினி – கவர்ச்சி மிக்கவர்,காருண்யம் கொண்டவர், கனிவு உடையவர்,    
                பரிசுத்தமும், பாசமும் நிரம்பியவர், காமவேட்கை மிக்கவர், கடவுள்
                பக்தி உடையவர்.

2. பரணி – பரிசுத்தம் அற்றவர், சண்டை, சச்சரவு, வஞ்சகம் மிக்கவர், திரைமறைவில்
        தீமை புரிபவர், கொடியவர், குரோதம் புரிபவர்.

3. கிருத்திகை – கொள்கை பிடிப்பற்றவர், அழகும் அங்கலட்சணமும், பண்பும்
             பரிசுத்தமும் கொண்டு பெரியோரை மதிப்பவர், அன்பும் ஆதரவும்
             கொண்டமக்களால் புரிப்படைவர், தாம்பத்திய ஐக்கியத்தை காப்பவர்.

4. ரோகினி – நேர்மை, உண்மை, கடும் உழைப்பு, அன்பு உடையவர், கணவரோடு
           அன்போடும் ஆதரவோடும் பழகுவார், இனிமையாக பேசுவர், தான
           தர்மம் செய்வார், மிகுந்த செல்வம் உடையவராக, திகழ்வார்.

5. மிருகசீரிசம் – சுத்தம், சுகாதரமானவர், அழகும், அங்கலட்சணமும், மதிப்பும்,
              மரியாதையும், ஆடை, ஆபரண யோகமும் பெற்றவர்,
              அருசுவைப்பிரியர் செல்வமுடையவர்.

6. திருவாதிரை – குரோதகுணமும், நயவஞ்சகமும், ஆத்திரமும், பகைவரை
               அழிக்கவல்ல வல்லமையும், குற்றம் புரிபவரும் தூய்மை
               அற்றவரும் ஆவார்.

7. புனர்பூசம் – பண்பும், பரிசுத்தமும், அடக்கமும், தரும சிந்தனையும், செல்வாக்கும்,
            கருணை மற்றும் காருண்யம் மிக்கவர்.

8. பூசம் – சுகபோக சுவையாளர், வீடு, நிலம், வாகனம் வளம் படைத்தவர்.

9. ஆயில்யம் – அலுத்து ஆர்ப்பரிக்கும், சுகாதாரமற்ற, ஆபாச வார்த்தைகளை
                பிரயோகிக்கும், செய்யத்தகாத செயலை புரியும் விசுவாசம் அற்ற
                மாதர்.

10. மகம் – ராஜயோகம், சுகபோகமும், தீயவர் தொடர்புடைய, உயர் வர்க்கத்திற்கு
        மண்டியிடுபவர்.

11. பூரம் – சந்தோஷ, சல்லாபம் மிக்க, மக்கட்பேரால் பூரிப்படையும், செல்வமும்
       ,செல்வாக்கும் படைத்த, நீதி நெறியுடன் வாழும் பண்பும் பரிசுத்தமும்
        காப்பவர்.

12. உத்திரம் – சரச சல்லாப பிரியர், மக்கப்பேறும், செல்வாக்கும் உடையவர்,
           குடும்பத்தை பாதுகாப்பவர், உத்திரமாய் வாழ நினைப்பவர்.

13. அஸ்தம் – வனப்பும், வசீகரமும், அழகும், அங்கலட்சணமும் பொருந்திய,
           நுண்கலையில் வல்ல சுகபோகி.

14. சித்திரை – அணியும், ஆபரணமும், வனப்பும், வசீகரமும், அழகும் பொருந்திய
           சிறந்த மனிதர்.

15. சுவாதி – எதிர்ப்பை வெல்லுகிற, நல்லோர் இணக்கத்தால் நன்மை பெறும், பண்பும்
         பரிசுத்தமும் மிக்க சுகபோகி, மக்கப்பேரால் பூரிப்படைவர்.

16. விசாகம் – சாஸ்திர சம்பிரதாயங்களோடு குலதர்மத்தைக்காப்பவர், அறிவாற்றல்,
           பெச்சுத்திரன்மிக்க அழகும் அங்கலட்சணமும் பெற்றவர்,
           தீர்த்தயாத்திரை பிரியர், கடவுள் சேவை செய்பவர்.

17. அனுஷம் – கணவனுக்கு ஏற்ற பதிவிரதை, தியாக குணமும், வனப்பும், வசீகரமும்,
            பண்பும் பரிசுத்தமும், பாராளும் பாக்கியமும் பெற்றவர், பொது
            நலசேவைவாதி, ஆடை, அணி, அலங்காரப்பொருள் மிக்கவர்,
            மதக்கோட்பாடுகளை மதிப்பவர்.

18. கேட்டை – சத்திய நெறி காப்பவர், சகல சுக போகி, கணிவும், காருண்யமும்,
           பண்பும் பாசமும் மிக்கவர், சுற்றம் விரும்பி.

19. மூலம் – கொடுமை நிறைந்தவர், வெறுப்பும் விகல்பமும் மிக்கவர், ஏழையால்
         ஏங்கி, நலிவு உறுபவர், உறவைப் பகைப்பவர்.

20. பூராடம் – அழகும், ஆற்றலும், அங்கலட்சணமும், பண்பும், பரிசுத்தமும் உடையவர்,
          நற்செயல் புரிபவர், குடும்பத்தில் சிறந்தவர், நேசம் உடையவர்கள்,
          தானம் செய்பவர்கள், சுக துக்கம் எதுவானாலும் மனமுவந்து
          அனுபவிப்பவர்கள்.

21. உத்திராடம் – பெறும், புகழும் பெருவாழ்வும், கனிவும், காருண்யமும் மிக்கவர்,
             சந்தோஷ சல்லாபி, கணவனுக்கு ஏற்ற பதிவிரதை.

22. திருவோணம் – அழகு , அங்கலட்சணம், வனப்பு, வசீகரம் பொருந்திய,
               தயாளகுணம், தார்மீக சிந்தனை, நம்பிக்கையும் நாணயமும்,
               தியாகமும் மிக்கவர்.

23. அவிட்டம் – வீடு, நில வாகன லாபம், பெருந்தன்மை படைத்தவர், ஆடை, அணி,
            ஆபரண, அறுசுவை பாக்கியம் பெற்றவர்.

24. சதயம் – நியாமமும், நீதியும், நேர்மையும், நேசமும் மிக்கவர், காமகுரோதங்களை
            அடக்குபவர், மூத்தோரை மதிப்பவர்.

25. பூரட்டாதி – சமுதாய உயர் அந்தஸ்து உடைய பொன் பொருள் போகம் மிக்க,
              தார்மீக சிந்தனையும், தரும குணமும் படைத்தவர், அறிவு ஆற்றல்
              மிக்க அருளாளர்.

26. உத்திரட்டாதி – மாண்புமிக்க, பாசமுடைய பதிவிரதை, குலதர்மம் காக்கும் அறிவு
               ஆற்றல் படைத்த சந்தோஷ சல்லாபி.

27. ரேவதி – சாஸ்திர, சமூகம், சம்பிரதாயம் மதிப்பவர், உயர் லட்சியம் உடைய
         நேசபாசம் காப்பவர், அழகு, அங்க லட்சணம், வனப்பு, வசீகரம்
         பொருந்தியவர், எதிரியை வெல்பவர், வாகன வளம் உடையவர்.

                                                  நன்றி!

                                  வர்மக்கலை ஆசான்
                            எஸ்.கோபாலகிருஷ்ணன்
                            தீத்திப்பாளையம்,கோவை
                                 9894285755

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.