ஆன்மீக வியாதியின் அறிகுறிகள்
1. சுத்தமே இறைஹ வழிபாடு என்று தோன்றும்.
2. செயல்கள் செய்வதைவிட நடக்கட்டும் என்று விட்டுவிடத் தோன்றும்.
3. அடிக்கடி சிரிப்பு வரும்.
4. இயற்கையோடும் சுற்றி இருப்பவர்களோடும் இணைப்புணர்வு தோன்றும்.
5. அடுத்தவர்களைப் பாரட்டுதல் அதிகம் நடக்கும்.
6. இறந்த கால அனுபவங்களின் பயமுறுத்தல்களிலிருந்து செயல்படாமல், இயல்பாகவும் நடப்பதை ஏற்றும் செயல்படத் தோன்றும்.
7. இந்தக் கணத்தை அனுபவிக்கும் ஆற்றல் அதிகமாகும்.
8. கவலைப்படும் சக்தி குறைந்துபோகும்.
9. தகராறு செய்யும் சக்தி குறைந்துபோகும்.
10. மற்றவர்களை எடைபோடுவது வீண்வேலையாகத் தோன்றும்.
11. தன்னை எடைபோட்டுக் கொண்டேயிருப்பதிலும் சலிப்பு தோன்றும்.
12. மற்றவர் செயல்களை வியாக்கியானம் செய்வதில் ஆர்வம் குறையும்.
13. இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் அழிய ஆரம்பிக்கும். புதிய நம்பிக்கை கொள்ளவும் முடியாது.
14. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு தோன்ற ஆரம்பிக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.