நச்சுனு ஒரு பேச்சு
~~~~~~~~~~~~~
மன்னித்து, மறந்து, விட்டுவிடு!
மன்னித்து விடு!
உன்னை,
உன் அறியாமையை,
உன் தவறுகளை,
உன் அத்துமீறல்களை,
உன் ஆர்வக்கோளாறுகளை,
உன் முட்டாள்தனங்களை,
உன் பைத்தியக்காரத்தனங்களை,
உன் பொய்களை,
உன் இயலாமைகளையும்...எனில்...
நீ நேராகிப்போவாய்!
மறந்துவிடு!
உன் தோல்விகளை,
உன் இழப்புகளை,
உன் அவமானங்களை,
உன் வலிகளை,
உன் வேதனைகளை,
உன்னை மறந்தவர்களை,
உன்னை மதிக்காதவர்களை,
உன் அன்புக்கு பாத்திரமில்லாதவர்களையும்...எனில்..
நீ லேசாகிப்போவாய்!
விட்டுவிடு!
உன் கபட எண்ணங்களை,
உன் பொறாமைகளை,
உன் வஞ்சங்களை,
உன் காழ்ப்புணர்ச்சிகளை,
உன் ஆதிக்க தோரணையை,
உன் அதிகார வார்த்தைகளை,
உன் தாழ்வு மனப்பான்மையினையும்...எனில்...
நீ சீராகிப்போவாய்!
நீ நேராகி, லேசாகி, சீராகும்போது,
வானம் கைக்கு எட்டும்,
தொட்டதெல்லாம் துலங்கும்,
விட்டதெல்லாம் தேடி வரும்!
எனவே..
மன்னித்து, மறந்து, விட்டுவிடு!
Friday, 22 April 2016
நச்சுனு ஒரு பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.