Sunday 17 April 2016

தூவானம் அருவி

உடுமலை-மூனாறு சாலையிலிருந்து இந்த அருவிக்கு செல்ல 3 கி.மீ அடர்ந்த வனத்திற்குள் நடக்க வேண்டும். கேரளா அரசு இங்கு செல்ல 215 ரூ கட்டணம் செலுத்தினால் அனுமதிக்கிறது. உடன் பாதுகாப்பிற்கும் வன பணியாளர் ஒருவர் கூட வருவார். குழுவாக செல்லும்போது இக்கட்டனத்துடன் நபர் ஒருவருக்கு 100 ரூ வீதம் அதிகம் வசூலிக்கும். இரண்டு பயணிகளுக்கு ஒரு வனப் பணியாளர் வீதம் உடன் வருவர். வெளிநாட்டு பயணிகளுக்கு 500 ரூ கட்டணம்... மேலும் இந்த அருவிக்கு மிகமிக அருகில் இரவில் தங்கிக்கொள்ளலாம். இதற்கு ஒரு நாளைக்கு 3000 ரூ கட்டணம் + சைவ உணவுடன். பாதுகாப்பிற்கு வன பணியாளர்கள் இருப்பர். வனவிலங்குகளுக்கு நடுவில்.. பயமுறுத்தும் அருவி ஓசைக்கு அருகில் அடர்ந்த வனத்தில் இரவில் தங்குவது, அருவி நீரில் குளிப்பது என்பது வாழ்கையில் நீங்கா நினைவை தரும். நீர் குறைவாக விழும்போது அருவியில் குளிக்கலாம்.. இந்த அருவி பகுதிக்கு செல்லும்போது அரிய தாவரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.