Wednesday 20 April 2016

மனம் காமத்தை நம்பியிருக்கிறது.

ரிஷிகளும்,முனிவர்களும் மலைக் குகைகளில் தியானம் செய்யும் இந்தியக் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
உணர்வு நிலையின் ஒரு உச்சியை அவர்கள் அடையும்போது எப்பொழுதுமே திடீரென்று ஒரு காம உணர்வு ஏற்படுகிறது.
அப்சரஸ்கள் என்ற விண்ணுலக தேவதைகள் யாராவது உணர்வு நிலையை அடைகிறார்களா என்பதை அறிய காத்துக் கொண்டிருப்பது போல,அங்கு வருவார்கள்.
உணர்வு நிலையை அடைய விடாமல் தடுக்கும் சதித்திட்டத்தோடு வருவது போலிருக்கும்.
கானகத்தின் ஒரு மூலையில், யாரோ ஒருவர் கொஞ்சம் உணர்வு நிலையை அடைந்தாலும்,திடீரென்று அழகிகள்,
அப்சரஸ்கள் விண்ணுலகத்திலிருந்து வருவார்கள்.
அவர்கள் அழகான,சரியான வடிவமைப்பை உடையவர்கள்.அதை விட சரியான வடிவமைப்பு உங்களால் கற்பனை செய்ய முடியாது.
தங்கத்தால் செய்ததைப்போல, ஒளி ஊடுருவக்கூடியதாய் அவர்கள் உடல் அமைந்திருக்கும்.
திடீரென்று உணர்வு இழந்து விடுகிறது. ரிஷி ஆசையின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்.கீழே விழுந்து விடுகிறார்.
இந்த அப்சரஸ்கள் எங்கிருந்து வருகிறார்கள்?
அவர்கள் உண்மையிலேயே விண் உலகிலிருந்து வருகிறார்களா?
உணர்வு நிலைக்கு எதிராக ஏதோ சதி திட்டம் நடக்கிறதா?
"இல்லை "
தேடுபவனின் மனதிலிருந்து அவை வருகின்றன.
மனமானது எல்லாவற்றையும் இழந்து விடப்போகிறது என்ற தருணத்தில், காமத்தை தன் கடைசி ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
உணர்வானது உன்னத நிலையை அடையப் போகிறது என்பதை மனம் கண்டவுடன், அந்த நிலையை அடைந்த பிறகு மனதிற்கு வேலையை,சக்தியே இருக்காது என்பதைக் கண்டவுடன், மனம் கழண்டு விடப் போகிறது என்பது புரிந்த உடன் அது தன் கடைசிப் போராட்டத்தை நிகழ்த்துகிறது.
மனம் காமத்தை உண்டாக்குகிறது.
காம இச்சையை ஏற்படுத்துகிறது.
அங்கு எந்தப் பெண்ணுமே சென்றிருக்க மாட்டாள் என்று நான் கூறுகிறேன்.
அது இறக்கும் தருணம்.அந்த மனிதன் உணர்வோடிருந்தான் ; எனவே, மனம்தான் கடைசி தந்திரத்தைப் பயன் படுத்தியது.
அதுதான் கடைசியானது; இதை நீங்கள் வென்று விட்டால், நீங்கள் மனதை வென்று விட்டீர்கள்.
மனம் மற்ற தந்திரத்தைப் பயன் பபடுத்தும்.
எப்பொழுதுமே காமத்தை தன் கடைசி ஆயுதமாக வைத்திருக்கும்.
காமம் செயல்படா விட்டால், வேறு எதுவுமே செயல்படாது.மனம் அடிப்படையில் காமத்தை நம்பியிருக்கிறது.
--ஓஷோ--

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.