Friday 22 April 2016

உன்னதமான நிலையே விழிப்புணர்வு.

எனக்கும் மாம்பழத்துக்கும் இடையே நடந்த  ஆய்வில் கண்ட  தெளிவு - பகிர்வு

ஒரு வாரம் முன்பு 4 மாம்பழம் வாங்கி வந்தேன், அதில் ஒரு மாம்பழம் அன்றே சாப்பிட்டேன் மிக ருசியாக இருந்தது,

பின்பு ஒவ்வொரு மாம்பழத்தை அடுத்த அடுத்த நாள் சாப்பிட்டேன் மீதி இருந்த மூன்று மாம்பழத்திலும் ருசியே இல்லை என நாக்கு சொன்னது.

பின்பு ஆய்வு செய்தேன் முதல் நாள் சாப்பிட்ட அதே ருஷியை கொண்டு மீதி மூன்றையும் எதிர்பார்ப்பு கொண்டு சாப்பிட்டது அதனால் கொஞ்சம் ருசி கமியாக இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

காரணம் பழைய கடந்த கால  ருஷியை சுமந்து கொண்டு வந்ததால் மீதி உள்ள மூன்றிலும் உள்ள ருசியை ஒப்பீடு செய்து சிறு சலிப்பை ஏற்படுத்தியது.

இன்னும் ஆழமான ஆய்வு கொண்டு பார்த்தால் அந்த மாம்பழம் வெய்யில் அதிக நேரம் செடியில் இருக்கும் போது இருந்திருக்கலாம், அந்த வாதுக்கு சரியான சத்து போகாமல் இருந்திருக்கலாம் என பல இயற்கை காரணங்கள் இருந்திருக்கலாம்.

குறைபாடு மாம்பழத்தில் இல்லை என் நாக்கு தான் கடந்து முடிந்து விட்ட ருசியை எதிர்பார்ப்பு கொண்டு அடுத்த நிகழ் காலத்தின் இருந்த ருசியை ஒப்பிட்டு அந்த ருசியை ரசிக்க தெரியாமல் தவற விட்டது.

இது போல தான் விழிப்புணர்வு இல்லாத இடங்களில் , முடிந்து போன பல அனுபவங்களை சுமந்து கொண்டு ஒவ்வொரு நிகழ் கால நிமிடத்தில் இருக்கும் சந்தோஷத்தை இழந்து கொண்டிருக்கிறாய்,

ஒன்று -நேற்றைய துக்கத்தை சுமந்து  கொண்டு இன்றைய சந்தோஷத்தை இழந்து கொள்கிறாய் அல்லது இன்றைய சந்தோஷத்தை சுமந்து கொண்டே அதே போலவே அடுத்து அடுத்து வரக் கூடிய சூழ்நிலையும் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வாழ்கிறாய்.

நேற்றைய சமையல் போல இன்று இல்லை,

நேற்று இருந்த வருமானம் இன்று இல்லை,

நேற்று என்னிடம் பேசிய நபர் இன்று அது போல பேசவில்லை,

போன வருஷம் இருந்த என் குழந்தையின் குணம் இன்று இல்லை

எனது வாகனம் சரியாக அப்ப இருந்தது போல இப்ப இல்லை.

நாளைக்கு நான் இப்படி செய்தாக வேண்டும்,

ஒரு வருஷம் கழித்து என் குணம் இப்படி இருக்க வேண்டும் ,

இந்த 6 மாதத்தில் நான் இந்த மாறி  வீடு கட்ட வேண்டும்,

நினைத்த மாறி அழகான பெண்ணை  கல்யாணம் செய்தாக வேண்டும்,
என்று இதெல்லாம் விவரம் தெரிய ஆரம்பிக்கும் முன்பே மொத்த 100 வருட வாழ்க்கைக்கு இப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு வாழ்வை வாழ்கிறாய், என சொல்லிக்கொண்டே போகலாம்

இந்த நிமிட வாழ்க்கையை இழந்து கொண்டு வாழ்கிறாய்

ஆனால் வாழ்க்கை இந்த நிமிடத்தில் தான் உள்ளது என்பதை புரிந்து கொண்டால் வாழ்க்கை அற்புதம் தான் ,

இந்த நிமிடத்தில் முழுமையாக வாழ துவங்கி விட்டால்  அடுத்த நொடி அடுத்த  நிமிடம், ஏன் அடுத்த வருடம் வரை வாழ்வு மென் மேலும் அற்புதமாக
இருக்கும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.

துக்கம் - சந்தோஷம் என்பதை கடந்த ஒரு உன்னதமான நிலையே விழிப்புணர்வு.

விழிப்புணர்வு உடன் இருக்கும் தருணங்களில் உன் உள் நிலை சற்று முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதை உணர முடியும் ,

அந்த நிலையில் உன்னை சுற்றிலும் உனக்கு உள்ளே  நடக்கும் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் நீ இருப்பாய், அதனுடன் அதில் இருக்கும் நிலையான ஆனந்த உணர்வை ஆழமாக கவனிக்க தோன்றும்.

தியானம் செய்தால் விழிப்புணர்வு சாத்தியம்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.