Thursday 21 April 2016

கனவுகள் ஐந்து வகையானவை.

கனவுகள் ஐந்து வகையானவை.
முதல் வகை: உங்கள் ஆழ்மனத்தின் விருப்பங்கள் பயங்கள் மூலம் எழக் கூடியவை.
இரண்டாவது வகைக் கனவு: உங்களுக்கு ஏற்கனவே நேர்ந்த அனுபவங்களைக் கொண்டிருக்கும்.
மூன்றாவது வகைக் கனவு: உங்கள் சுய அறிவினால் (வரப்போகும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறியும் சக்தி) வரும் கனவு. வருங்காலத்தில்நிகழப் போகும் சம்பவங்கள் உங்கள் கனவில் வரக்கூடும்.
நான்காம் வகைக் கனவுக்கும் உங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.அவை நீங்கள் தங்கி இருக்கும் இடத்தைப் பொறுத்திருக்கும்.ஒரு வேளை நீங்கள் ஒரிஸ்ஸாவிற்குப் போய் ஒரு தங்கும் விடுதியிலோ, அல்லது ஒருவரின் இல்லத்திலோ தங்கியிருக்கும் போது உங்கள் கனவில் ஒரியா மொழியைக் கேட்ப்பீர்கள். இப்படிப் பட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
ஐந்தாவது வகைக் கனவு மேற்சொன்ன நாலு வகைக் கனவுகளின் கலவை.நம்முடைய 90% கனவுகள் எல்லாம் கலந்த ஐந்தாம் வகையைச் சேர்ந்தவை.உங்கள் சுய அறிவு சிறிதளவு செயல் படும்.மற்ற விருப்பங்கள், பயங்கள் முதலியனவும் கனவில் பிரதி பலிக்கும். கனவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
ஆம்.சில சமயம் உங்கள் சுய அறிவின் காரணமாக சில கனவுகள் வரலாம்.பின் விளைவுகளைப் பற்றி இருக்கலாம்.ஆனால் அதுவும் உங்கள் பயத்தாலோ அல்லது அடைய விரும்பும் பொருளைப் பற்றியோ ஏற்படலாம்.நான் சொல்வது புரிகிறதா? அப்படிப் பட்ட கனவை ஒதுக்கவும் முடியாது.ஒரேயடியாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.அதனால் கனவுகளைப் பற்றிய கவலை வேண்டாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.