Tuesday, 12 April 2016

ஓஷோ டைனமிக் தியானம்!!

ஓஷோ டைனமிக் தியானம்!!
இருப்பதிலேயே மிகவும் கடினமான மிகவும் சக்தி வாய்ந்த தியானமாக டைனமிக் கருதப்படுகிறது 5 இடைவெளிகளில் மாறிக்கொண்டே இருக்கும் இசை, முதல் 10 நிமிடங்கள் சுவாசத்தை மிகவும் வேகமாக உள்ளிழுத்து விடவேண்டும்.ப்ரீத் ஃபாஸ்ட்..ப்ரீத் ஃபாஸ்ட் என்கிற ஓஷோ வின் உற்சாக குரலும் துள்ள வைக்கும் இசையும் முழுமையான சுவாசம் நடக்க ஒத்துழைக்கும்.அடுத்த 10 நிமிடங்கள் ஜிப்ரிஷ் பைத்திய நிலைக்குப் போய் உள்ளடைப்புகளை வார்த்தைகளாய் வெளிவரும்.அடுத்த 10 நிமிடங்கள் ஜம்ப் அண்ட் எம்பிக் குதித்து அடிவயிற்றிலிருந்து ஊ என குரலெழுப்ப வேண்டும்.
நான்காவது ஸ்டாப் எனும் ஓசைக்குப் பின் அந்தந்த நிலைகளிலே உறைந்து போக வேண்டும்.சகலமும் அடங்கி சொந்த வீட்டில் புதைந்து கொள்ளும் மனம்.இது 15 நிமிடங்கள்.ஐந்தாவது நிலை கொண்டாடுதல் மாறும் இசைக்கேற்ப மெல்ல உடல் தளர்த்தி நடனம் இதுவும் 15 நிமிடங்கள். இறுதியில் உடலை தரையில் கிடத்தி விடுதல்.தியானத்திற்க்குப் பின் காற்று போன பலூன் போல ஆகிவிடும் உடல்.ஒரு புள்ளியில் உறைந்து போகும் மனம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.