Sunday 17 April 2016

மணக்கடவு அணை

பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் கேரளா எல்லையோரம் உள்ளது மணக்கடவு சிற்றூர். இங்கு சமத்தூர் ஜமீனுக்கு சொந்தமான வானவராயர் விவசாய கல்லூரி ஒன்றும் உள்ளது. அடுத்து ஆழியாறு ஆற்றின் கரையில் இவ்வூர் இருப்பதால் செழிப்புக்கு எக்காலத்திலும் குறைவில்லை. இங்கு ஆழியாறு ஆற்றின் குறுக்கே ஒரு சிற்றணை உள்ளது. இந்த அணையின் வழியே ஆற்றில் செல்லும் நீர் அளவிட்டு கேரளாவிற்கு வழங்கப்படுகிறது. பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பங்கீடு ஒப்பந்தத்தின் படி ஆண்டுதோறும் கேரளாவிற்கு ஆழியாறு ஆற்றிலிருந்து மட்டும் 7.5 டி.எம்.சி நீர் வழங்கவேண்டும். அந்த நீர் அளவீடு இந்த மணக்கடவு அணையில்தான் கணக்கிடப்படுகிறது. தமிழ்நாடு பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையை அவ்வப்போது கேரளாவும் அளவீடு செய்யும். இங்கு திறக்கப்படும் நீர் கேராளாவில் உள்ள மூலத்தரா அணையை சென்று அடையும். இந்த அணைக்கரையில் சமத்தூர் ஜமீனுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் செழித்து கிடக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.