Tuesday, 26 April 2016

அகோகிகாரா

அகோகிகாரா
இந்த வார்த்தைக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்
ஆனால் ஒவ்வொரு ஜப்பானியருக்கும் இந்த பெயரை கண்டால் கொஞ்சம் பயம் வரும்...
காரணம் உலகின் அதிகமான தற்கொலை நடக்கும் இடத்தில் 3 வது இடத்தில் இருக்கிறது இந்த அகோகிகாரா
அதாவது சூசைட் பாயின்ட்
2003 ம் ஆண்டில் 105 உடலை கைப்பற்றி இருக்கிறது ஜப்பானிய வாலன்டியர்ஸ்
வாலன்டியர்ஸ் என்றால் அதான் பல நாட்களாக தொங்கி கொண்டு அழுகிய நிலையில் கிடக்கும் உடலை மீட்கும் படை..
ஆமாம் தனியாக அரசாங்கத்தின் சார்பில் ஒரு குழு வைத்து இருக்க கூடிய அளவிற்கு மரணங்கள் அங்கே நிகழும்...
என்ன செய்யுறது இந்த காலத்துல இதெல்லாம் சகஜம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு
காரணம் 1960 இல் novel Kuroi Jukai என்பவர் இதை மய்யமாக வைத்து ஒரு நாவலை எழுதியுள்ளார்
கருப்பு காடுகள் என்பது தான் நாவலின் தலைப்பு...
ஆக 1960 க்கும் முன்னதாக இந்த தற்கொலைகள் உள்ளது...
இதற்கு பிறகே மேலே குறிப்பிட்ட வாலண்டியர்ஸை நிருவியது அரசு
அதாவது 1970 களில் இருந்து இந்த உடலை கைப்பற்றும் பொறுப்பை ஏற்றுள்ளது...
இதற்கான காரணம் என்ன தெரியுமா ??
காதல் தோல்வி இல்லை
வேலையில் மன அழுத்தம் தான் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.