Tuesday, 26 April 2016

அனுபவ மொழி

தந்திரம் - சூழ்ச்சி - என ஏன் வழிமுறைக்கு கொண்டு வந்தார்கள் தெறியுமா ? முடியாதவனாலும் முடியவைக்கத்தான் . நாள் கடந்து பெறுவதை விரைவில் அடையவும் , சிரமமின்றி காரியத்தை சாதிக்கவும் தான்.முடியாது  என்று எதுவுமில்லை . எல்லாம் நம் வழிமுறையில் தான் உள்ளது.

வார்த்தைகளுக்கு பலமுண்டு
ஒருவரை திடீரென்று மற்றொருவர் கடிந்து பேசிவிட்டாலோ அல்லது முட்டாளே என்று கூறிவிட்டாலோ உடனே கோபத்துடன் அடிக்க சென்றுவிடுவார்
“முட்டாள் நீ “ எனும் பதமே முரட்டு பலத்தை ஒருவருக்குள் தூண்டிவிடுமானால் உத்தமர்களின் உபதேசங்கள், தெய்வங்கள் திருநாமங்கள் இவற்றை உச்சரிப்பதனால் எவ்வளவு சக்தி கிடைக்குமென எண்ணி பாருங்கள்
உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரையோ மந்திரத்தையோ தினமும் சொல்லி வாருங்கள் அது கொடுக்கும் சக்தியே உங்களை வழி நடத்தும்....மஹாபாரத யுத்தம் நடக்க ஒரே ஒரு வாக்கியம் தான் காரணம்
பாண்டவர்களின் புது மனை புகுவிழாவிற்கு வந்த துரியோதனன் ஒரு இடத்தில் கால் இடறி விழ பார்த்தான்.
அதனை மாடத்திலிருந்து பார்த்த திரெளபதி துரியோதனனை பற்றி தன் தோழிகளிடம் விளையாட்டாக கூறிய
”குருடனின் மகன் குருடன்”
எனும் கேலி வார்த்தைகளே அவை....
வார்த்தைகளை அளந்து அராய்ந்து 2 முறை யோசித்து பேசினால் நலம்

அடுத்தவரிடம் உள்ள நம்முடைய ஈடுபாடு,அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பு, அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சி ஆகியவை வரும் என்ற நம்பிக்கைகள்தான் நம்முடைய மகிழ்ச்சியற்ற தன்மைக்குக் காரணங்கள்.ஆகும்.நீங்கள் எந்த விதத்திலும் மகிழ்ச்சியை வெளியில் இருந்து அடையவில்லை.ஆனால் அந்த நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.அந்த நம்பிக்கை உங்களை விட்டு விலகும்போது நீங்கள் விரக்தி அடைகிறீர்கள்.

இளமை தவறான பாதையை
நம்புகிறது...!
அனுபவம் சரியான பாதையையும்
சந்தேகப்படுகிறது

ஆசைகளை சொகுசாக ஏஸி காரில் உலா அனுப்பி வைத்தீர்கள் என்றால், அது வேலைக்கு ஆகாது. ஆசைகளைப் புழுதிபட, கட்டாந்தரையில், கொளுத்தும் வெயிலில் இறக்கி விட வேண்டும். அவற்றுக்குத் தகுதி இருந்தால், அவை தனக்கான காலணிகளையும் நிழலையும் தேடிக்கொள்ளும்.

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்
- டாக்டர் அப்துல் கலாம்.

நடக்கமுடியாதவற்றை கனவு காணுங்கள். நீங்கள் இந்த உலகில் மிகச்சிறந்த, தனித்தன்மை வாய்ந்த செயல்களை செய்யப் பிறந்தவர் என அறிந்து கொள்ளுங்கள்; இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். கனவு காணவும் பெரியதாக சிந்திக்கவும் உங்களுக்கு சுதந்திரம் கொடுங்கள்

அடுத்தவரிடம் உள்ள நம்முடைய ஈடுபாடு,அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பு, அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சி ஆகியவை வரும் என்ற நம்பிக்கைகள்தான் நம்முடைய மகிழ்ச்சியற்ற தன்மைக்குக் காரணங்கள்.ஆகும்.நீங்கள் எந்த விதத்திலும் மகிழ்ச்சியை வெளியில் இருந்து அடையவில்லை.ஆனால் அந்த நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.அந்த நம்பிக்கை உங்களை விட்டு விலகும்போது நீங்கள் விரக்தி அடைகிறீர்கள்.

உலகில் உள்ள பொருட்கள் அனைத்துமே நம்மால் உருவாக்க படவில்லை.அனைத்தும் நம்மால் உரு மாற்றம் செய்ய பட்டவைகள்.

[கொஞ்சம்கூட நம்பமுடியாதது என்னவெனில் உங்களது மனம்தான் ஏனெனில் அதற்கு என்ன பிடிக்கும்? எப்போது பிடிக்காமல் போகும் என உங்களுக்கே தெரியாது.

எந்தவொன்றை அடைய வேண்டுமென்றாலும் அதற்குப்பின் இந்த 3 காரணங்களில் ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
1. அன்பு
2. பேராசை
3. பயம்

: ஞானசித்தி (Enlightenment) என்பது எதைப் பற்றியும் குறைகூறாததும் (No Complaints) எதற்கும் விளக்கம்கூறாததுமாகும் (No Explanations).

மன அழுத்தம் அடைவதற்கு ஒரு மந்திரம் இருக்கின்றது. அது என்னவென்று தெரியுமா?
எனக்கு என்ன ஆகும்? எனக்கு என்ன ஆகும்? எனக்கு என்னஆகும்? என்று ஓரிடத்தில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது தான் அந்த உபாயம்.
மன அழுத்தம் வேண்டாம் என்றால், எனக்கு என்ன ஆகும் என்பதை விட்டு விட்டு, நீங்கள் என்ன செய்யலாம்  மீதியிருக்கும் வாழ்நாளில் எப்படிப் பயனுள்ளதாக ஆக்கலாம் என்று பாருங்கள்.

மன அழுத்தம் என்பது, மூளையில் ஒரு பகுதியில் ஏற்படும் ஒரு வகை மின் அலை. அதை முறியடிப்பதற்கு, பாடுங்கள், ஆடுங்கள், தொண்டு செய்யுங்கள். எப்போதும் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.