உயிரை பற்றிய ஒரு ஆய்வு - பகிர்வு
சற்று நாளாகவே உன்னை சுற்றி நிகழும் மரணங்களை பார்க்கும் பொழுது உனக்கு வந்த கேள்வி
கண்ணுக்கு தெரியாத உயிர் கண்ணுக்கு தெரியாமலே போய்க் கொண்டு இருக்கிறது - ஏன் இந்த நிலை என்ற கேள்விகள் ஓடிக் கொண்டே இருக்கிறது
கண்ணுக்கு தெரியாத ஒன்றை நுனிகி பார்க்காத ஒரே காரணம் தான்
ஏன் நுனிகி பார்க்க முடிவதில்லை
காரணம் பார்த்தால் உயிர் என்ற ஒன்றில் நீ ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கும் பற்று அல்லது பிடிப்பு என்றே சுருக்கமாக சொல்லலாம்
இந்த கீழே இருக்கக் கூடிய கோடு தான் உயிர் என்று வைத்துக்கொள்ளலாம்
---------------
இந்த உயிர் என்ற கோட்டில் மேலே கீழே உள்ளே வெளியே என அனைத்திலுமே பல குப்பைகளை ஒட்ட fevi quick போட்டு மனதின் பிடியில் ஒட்ட வைத்துக் கொண்டே அதை எந்த நேரம் விடாமல் தூக்கி சுமந்து கொண்டே இருப்பதினால் தான் அதை நுனிகி பார்க்கவே முடிவதில்லை
அவை எதுவென்று சற்று உனக்கு உள்ளே வெளியே எப்படி பட்ட பிடிப்புகள் கொண்டு இருக்கிறாய் என்று ஆழமாக எட்டி பாரு !
எட்டி பார்த்தால் அதில் இருக்கும் அன்பு மட்டுமே இயல்பாக மலர்ந்து ஒவ்வொன்றிலும் ஊடுருவி செல்லுமானால் நீ எதிலும் ஓட்டி கொள்ள மாட்டாய் அங்கு பிடிப்பு எண்பதுக்கு இடமே இருக்காது
இந்த ஒட்டுதல் என்பது உனது மனதை கொண்டு ஒவ்வொன்றாக கவ்விக் கொண்டே செல்லும் ஒரு உணர்வு,
ஆனால் நீ உன்னை ஆழமாக கவனித்தால் எங்கெல்லாம் இப்படி ஒரு பிடிப்பு இருக்கிறது என்று உணர்ந்து கொள்வாய்
மேலோட்டமாக பார்த்தால் நான் எதிலும் பிடிப்பு இல்லை என்று தான் வெறும் வாய் வார்த்தைகளில் சப்பை கட்டு கட்டி கொண்டே இந்த மனம் இருக்கும், ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உன் உள் இருப்பு நிலை குழையும் பொழுது நீ இன்னும் பிடிப்புடன் இருப்பது புரியும்,
ஆனால் உண்மையான அன்பு என்பது எங்கும் எந்த பொருளிலும் , உறவுகளிலும்,
பதவிகளிலும்,
நிலை குழையாத நேர் நிறை உணர்வு, எங்கும் எதிலும் சமன் பட்ட உணர்வு நிலையில் பயணிக்கும் ஒரு நிலை, இந்த நிலையில் எந்த வித குப்பை தூசும் ஒட்டாமல் - ஒட்டும் தூசுகள் அவ்வப்போது விளக்கி கொண்டே போகும் நிலை,
கீழே குறிப்பிட்ட உதாரணங்களில் உன் சூழ்நிலைகளில் உன்னை ஆய்வு செய்து பார்த்தால் உன் உண்மை நிலை உனக்கு புரியும்,
உறவுகள்
-------
உன் வேலை ஆட்கள், உனது சகோதர, சகோதரி, அம்மா ,அப்பா ,குழந்தை ,பேரியப்பா,பெரியம்மா, என எல்லா உறவுகளிலும் ஓட்டி கொண்டு பிடிப்புடன் வாழ்கிறாய்,
பொருள்கள்
---------
உன் உடை , வண்டி ,கார், mixi ,grinder, tv, தொழில் , computer என எல்லா பொருள்களின் மேலே மிக பிடிப்புகள் கொண்டு வாழ்கிறாய்,
பதவிகள் - பொறுப்புகள்
----------
இதை கட்டி காப்பாற்ற ஒவ்வொன்றிலும் மிக பெரிய போராட்டம் அடக்கு முறைகளை கையாண்டு கொண்டிருக்கிறது உனக்கே தெரிவதில்லை
இவையெல்லாம் உன் உயிரை பற்றி உணர மிக பெரிய தடைகள்
ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்று பார்க்க வேண்டும், மேலே உள்ள உதாரணத்தில் எதையும் விட்டு விட்டு வனவாசம் போக தேவை இல்லை
அதர்க்கு பதிலாக இவை அனைத்துடன் வாழ்ந்து அந்த உறவுகளில், பொருள்களில், பதவிகளில் இருக்கும் பிடிப்பு நிலையை உணர்ந்து அந்த ஒட்டுதலை தியானம் மூலம் விளக்கிக் கொண்டே சென்று அன்பின் உணர்வில் ஊடுருவிக் கொண்டே செல்,
இந்த தன்மை தான் உன்னை சற்று ஆழமாக உன் கண்ணுக்கு தெரியாத உயிரின் நிலையை உணர வைக்கும்,
இது உடனே வரக் கூடிய உணர்வு அல்ல, காலம் காலமாக நமக்கு கொடுத்த வந்த விஷயங்கள் என்பது அப்ப சுப்பமான ஒன்று எனவே அதில் இருந்து வெளியே வர ஆழமான தீவிரமான கவனிப்பு உனக்கு உள்ளே கட்டாயம் வேண்டும்,
வாகனத்தில் செல்லும் பொழுது உனக்கு பின்னே அடிக்கும் high beam horn sound , சத்தமாக நடக்கும் பேச்சுக்கள் முதல் உன்னை சுற்றி நிகழும் accident மரணம் வரை அனைத்திலும் பீதி பேதி ஆகும் நிலை குலைவு நிலையை சந்தித்து அதை கடக்க ஒரு வழி உனக்கு உள்ளே தேடி பார் !
ஆரம்பத்தில் அது சிரமம் என்றாலும் உள் இருக்கும் உணர்வு அந்த சுவையை கண்டு தொட்டு விட்டால் சற்று இயல்பாக மாறிவிடும்
உயிருக்கு உள்ளே கலந்து உள்ள குப்பைகளை அகற்ற அகற்ற நீ உன் உயிரை உணர்ந்து கொள்ள முடியும்,
இந்த பிடிப்புகளற்ற அன்பு உணர்வு தான் உன் உயிர் உன்னை விட்டு பிரிவதை இயல்பாக ஆனந்தமாக கண்டு கொண்டு வழி அனுப்பும் வழியாக இருக்கும்,
இதற்கு தியானத்தை தவிர்த்து வேறு ஒன்றுமே இல்லை
உன்னை சுற்றி உள்ள ஒவ்வொன்றிலும், உன் உள்ளே இருக்கும் ஒவ்வொரு உணர்விலும
தியானத் தன்மையாக மலர செய் அது ஒன்று தான் உன்னைப் பிடிப்பிலிருந்து கடந்து அன்புக்கு செல்ல வைக்கும்,
எந்த நேரம் வேண்டுமானாலும் நிகழும் மரணத்தை ரசித்து விட்டு செல்ல தயாராக இரு!
தியானம் செய்
நன்றி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.