Wednesday 20 April 2016

இன்பமும் துன்பமும் இரு துருவங்கள்

மனம் ஓரிடத்தில் தங்காமல் இரு துருவங்களுக்கு

இடையில் ஒன்றை விட்டு மற்றொன் றுக்கு தாவியவாறு உள்ளது

உங்கள் கவனத்தை இன்பத்தின் மேலோ துன்பத்தின் மேலோ

வைக்காமல் அவை இரண்டுக்கும் நடுவில் வையுங்கள்

துன்பம் இருக்கும் போது அதை விட்டு ஓடாதீர்கள்

அதனுடன் அப்படியே இருங்கள்

உங்களுக்கு தலை வலி இருக்கிறது அதனுடன் அப்படியே இருங்கள்

அதை சாட்சியாக கவனித்தபடி இருங்கள்

மகிழ்ச்சியான தருணத்தில்அதற்கு சாட்சியாக இருங்கள்

வெறுமனே சாட்சி யாக இருந்து பாருங்கள்

துன்பம் வந்துள்ளது என்பது  உங்களுக்குத் தெரிகிறது

சிறிது நேரத்தில் அந்த துன்பம் மறைந்து விடும்

துன்பத்தின் எதிர் துருவத்தில் இருந்து தான் இன்பம் வருகிறது

இன்பமும் துன்பமும் ஒரு பெண்டுலத்தின் இரு துருவங்கள் போல் உள்ளன

உங்களால் விருப்பு வெறுப்பு இல்லாமல் பார்க்க முடியுமானால்

நீங்கள் நடுவில் வந்து விட்டீர்கள்

பெண்டுலம் நடுவில் வந்து நின்று விட்டது

அப்போதுதான் உலகம் எப்படி உள்ளது

என்பதை உங்களால் பார்க்க முடியும்

நீங்கள் நடுவு நிலைக்கு வந்து விட்ட பிறகு

பெண்டுலம் நிலைக்கு வந்து விட்ட பிறகு

உங்கள் மெய்யிருப் புணர்வு மையத்தில் குவிந்துள்ள போது

மெய்ம்மை என்பது என்ன வென்று உங்களுக்குத் தெரியும்

இவ்வாறு சலனம் இல்லாத அமைதி யான மனதால்தான் 

உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்

ஓஷோ
இன்பமும் துன்பமும் இரு துருவங்கள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.