Thursday, 9 June 2016

காக்கை

கா....க்....கை....
ஒரு கண்ணோட்டம்......

காக்கைக்கு தவறாது உணவிட்டு வந்தால் உங்களுக்கு., சனீஸ்வரன்., எமதர்மராஜன். மற்றும் முன்னோர்களின்  — முழு அருள் கடாட்சம் வழங்கி., உங்களுக்கு தலைமை ஸ்தானம் கிடைப்பது உறுதி.

தினமும் உலர்திராட்சை
ஒரு கைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளித்து வந்தால்., அது உங்காளுக்கு உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும்., அதையே மாற்றக் கூடிய சக்தி இதற்கு உண்டு என்கிறார்கள்.

இதை தவிர., வன்னி மர விநாயகருக்கு பச்சரிசி மாவு படைத்தாலும்., சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும்., ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா….
தெரியவில்லை.... ஆனால்., உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்.,
விபத்துக்கள்., வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது.

தீராத கடன் தொல்லைகள்., புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும்., உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது., உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே., நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு  அளிக்கவல்ல., அற்புதமான ஜீவராசி – காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.
தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க., தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.
திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து., ஏழு., ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து., காக்கைகளை "கா…கா.…" என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும்
பறந்து வரும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.
அப்படிச் சுவைக்கும் போது அந்தக் காக்கைகள் “கா…
கா…" என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி., பொட்டுக் கடலை., வாழைப்பழங்கள், வெற்றிலைப் பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப் படுத்தியதாகவும்
கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.
காக்கைகளில் நூபூரம்., மணிக்காக்கை., அண்டங்காக்கை., பரிமளம்., என சில வகைகள் உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.

எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால்.,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும்
திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

காலையில் நாம் எழுவதற்கு முன்.,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.
வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் அல்லது உறவினர்கள் வருவார்கள் மற்றும் நல்ல பலன் உண்டு. நமக்கு அருகில் அல்லது வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே., காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான்., எமன்., முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.