Thursday, 9 June 2016

ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம் !!

ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம் !!

மகாவிஷ்ணுவின் கரங்கள் ஒன்றில் காணப்படும் சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் எனப்படுகிறார். அந்தச் சக்கரம் சுதர்சன சக்கரம் எனப்படுகிறது.

காத்தல், படைத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காக்கும் தொழில் கொண்ட விஷ்ணுவுக்கு, துஷ்ட நிக்ரஹத்துக்கு பொறுப்பு இருப்பதால் ஆயுதப்படை அவசியம்.

அத்தகைய ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். அதனால் அவரை 'ஹேதிராஜன்’ என்றும் கூறுவர். திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரத்துக்கு உரிய தெய்வம் என்பதால், சுதர்சனர்
உக்கிர வடிவினர்.

வைணவர்கள் விஷ்ணுவின் சக்கர சக்தியை 'சக்கரத்தாழ்வார்’ என்று கூறுவர். சுதர்சனருக்கு சக்கரராயர் என்றும் ஒரு பெயர் உண்டு.

சுதர்சனர் பிரத்யட்சமான தெய்வம்.

ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகத்தை தினம் பாராயணம் செய்பவர்களுக்கு கல்வி, பயம், நோய், மனக்கலக்கம் நீங்கி வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற நமக்கு உறுதுணையாக இருப்பார்..

ஜெய் ஸ்ரீ நரசிம்மா !!

தியான ஸ்லோகம் :-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய
கவிதார்க்கிக கேசரீ :
வேதாந்தாசார்ய வர்யோமே
சந்நிதத்தாம் சதா ஹ்ருதி |

ஸ்ரீ சுதர்ஸன அஷ்டகம் - 1

ப்ரதிபட ச்ரேணி பீஷண  !
வரகுணஸ் தோம பூஷண!
ஜநிபய ஸ்தான தாரண !
ஜகத வஸ்தான காரண !

நிகில துஷ்கர்ம கர்சன !
நிகம ஸத்தர் மதர்சன !
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன !
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன !

பொருள் விளக்கம் :-

திரு சுதர்ஸன பெருமானே !
உனது ஒளிமிக்க கடைக்கண் நோக்கால் பகைவர்கள் அஞ்சி நிற்கும் காட்சியைக் கொண்டவனே !
அரிய நற்குணங்களின் திரல்களை அணிகலங்களாகக் கொண்டவனே !
ஆற்ற முடியாத பிறவிப்பிணியைக் களைந்து எங்களைக் காப்பவனே !
நெருப்பைப் போல அடியார்களின் எல்லாப் பாவங்களையும் அழித்து ஒழிக்கும் இனியவனே !

இவ்வுலகில் நாங்கள் வாழ்வில் வெற்றி பெற எங்களுக்கு அருள்புரிவீராக !!

"ஸ்ரீ சக்கரத்தாழ்வார்  திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.